விம்பிள்டனில் புதிய சாதனை-10 மணி நேரத்தைத் தாண்டியும் தொடரும் ஆட்டம்

விம்பிள்டன் டென்னிஸ் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் இஸ்னர் மற்றும் பிரான்ஸின் நிக்கோலஸ் மஹூத் ஆகியோருக்கு இடையிலான ஒற்றையர் போட்டி பத்து மணி நேரமாகியும் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

இரு வீரர்களும் 4 செட்கள் ஆடி முடித்த நிலையில், சம நிலையை எட்டினர். இதையடுத்து 5வது செட் ஆட்டம் தொடங்கியது. அதுதான் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. Buy cheap Doxycycline இரு வீரர்களும் சரியாக 10 மணி நேரம் ஆடி முடித்த நிலையில் இரவு கவிழ்ந்ததால், ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று தொடரவுள்ளது.

5வது செட்டில் இருவரும் தலா 59 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர்.

இப்படி ஒரு ஆட்டம் இதுவரை நடைபெற்றதில்லை. இனியும் நடைபெறப் போவதில்லை என்று மிகவும் அயர்ச்சியுடன் கூறினார் இஸ்னர்.

இந்த மாரத்தான் ஆட்டத்தை மைதானம் முழுவதும் ரசிகர்கள் [^] கூட மூச்சு விடக் கூட நேரமில்லாமல் கவனித்தனர்.

இதற்கு முன்பும் இப்படி ஒரு மாரத்தான் போட்டி நடந்தது. 2004 பிரெஞ்சு ஓபன் போட்டியின்போது பிரான்ஸ் வீரர்கள் பேப்ரிஸ் சான்டோரா மற்றும் அர்னாட் கிளெமன்ட் ஆகியோர் ஆறு மணி நேரம் 33 நிமிடங்கள் ஆடி 6-4, 6-3, 6-7, 3-6, 16-14 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை முடித்தனர்.

இஸ்னரும், மஹூத்தும் செவ்வாய்க்கிழமை ஆடத் தொடங்கினர். நான்கு செட்களை முடித்தபோது மாலை வந்து ஆட்டத்தை நிறுத்தியது. பின்னர் நேற்று மீண்டும் ஆட்டம் தொடங்கி இன்னும் முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இஸ்னர் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட்டை 6-3 என்ற கணக்கில் மஹூத் வென்றார். 3வது செட்டையும் மஹூத்தே 7-6 என்ற கணக்கில் வென்றார். 4வது செட்டை இஸ்னர் 7-6 (7-3) என்ற கணக்கில் வெல்லவே இழுபறியாகி விட்டது.

தற்போது 5வது செட் யார் வசம் என்பதில் பெரும் இழுபறி நிலவுகிறது. இன்று தொடரும் போட்டியைக் காண ராணி எலிசபெத் நேரில் வருகிறாராம். அந்த அளவுக்கு இந்தப் போட்டி இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

Add Comment