பிரதமர் வேட்பாளர்:விட்டொழிக்க அத்வானிக்கு மனமில்லை

advani

புதுடெல்லி:பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவினார் Doxycycline No Prescription எல்.கே.அத்வானி இவ்விஷயம் குறித்து கட்சி தீர்மானிக்கும் என அவர் பதில் அளித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது: தேர்தல் வருவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன. யார் பிரதமராக வரவேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் கட்சி முடிவெடுக்கும். அதை இப்போதே தீர்மானிக்க முடியாது. எங்கள் கட்சியில் தலைவர்களுக்குத் தட்டுப்பாடு ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.

தேர்தல் வருவதற்குள் எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்து விடும் வகையில் இப்போதைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளர் குறித்து தெளிவான பதிலை அத்வானி அளிக்காவிட்டாலும் அவர் நடத்தவிருக்கும் ரதயாத்திரை இந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டதுதான் என்பதை மறுக்கவில்லை.

பா.ஜ.கவில் பிரதமர் பதவி மோகத்தில் களமிறங்கி உண்ணாவிரத நாடகம் நடத்திவரும் மோடி அத்வானியின் பிரதமர் பதவி கனவை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment