இடைத்தேர்தல் விதிமுறை மீறல் ரூ.92 லட்சம், 34 கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி : இடைத்தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனைகளில் ரூ.92.33 லட்சமும், 34 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு, 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த நாட்களில் நேற்று முன்தினம் வரை பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக் குழு மற்றும் வாகன தணிக்கைக் குழுக்கள் விதி மீறல் தொடர்பான சோதனைகள் செய்தன. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பொருட்கள் விவரம் வருமாறு:

செப்டம்பர் 23ல் விடியோ கண்காணிப்புக் குழுவினரால் ^40.52 லட்சம், 34 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தேனியிலிருந்து திருச்சிக்கு வர்த்தகத்துக்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 28ல் வாகன தணிக்கைக் குழுவால் ^3.9 லட்சம், 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. 30ல் பறக்கும் படையினரால் ரூ.3.2 லட்சம், 16 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. வர்த்தகத்துக்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட் டது. 3 வழக்கும் கன்டோன்மென்ட் போலீசில் பதிவானது.

கடந்த 2ம் தேதி போலீ சார் நடத்திய சோதனை யில் 100 துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விற்பனைக்குரியது என தெரிவிக்கப்பட்டது. காந்தி மார்க்கெட் போலீசில் வழக்குப்பதிவானது. 6ல் வாகன தணிக்கை குழுவால், 488 பூணம் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவானது. 7ல்போலீசார் சோதனை யில் ரூ.3.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு எடமலைப்பட்டிபுதூர் போலீசில் வழக்குப்பதிவானது.

10ம் தேதி போலீசார் சோதனையில் ரூ.31.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் போலீசில் வழக்குப்பதிவானது. 11ல் பறக்கும்படையினர் சோதனையில் ரூ.9.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. மொத்தம் ரூ.92,33,280 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

243 தேர்தல் வழக்குகள் பதிவு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக கட்சியினர் மீது 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுவர் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல் மற்றும் பேனர் கட்டுதல் தொடர்பாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் திமுக & 78, அதிமுக & 54, தேமுதிக& 36, சிபிஐ & 31, மதிமுக & 17, காங்கிரஸ் buy Doxycycline online & 15, சிபிஎம் &1, விடுதலை சிறுத்தைகள் &1.

அனுமதியின்றி வாகனங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக மீது 6 வழக்குகளும், திமுக மீது 3 வழக்குகளும், தேமுதிக மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Add Comment