துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ந‌ட‌த்திய‌ மார்க்க‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் வாராந்திர‌ சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 23.06.2010 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து.

காய‌ல் மௌல‌வி சைய‌து அஹ‌ம‌து முத்து வாப்பா இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். முஹ‌ம்ம‌து ம‌ஹ்ரூப் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார்.

‘க‌ல்லுடைந்தாலும் சொல்லுடையாது’ என்று போற்ற‌ப்ப‌டும் ஷாபி ம‌த்ஹ‌பின் அறிஞ‌ர் அல்லாமா இப்னு ஹ‌ஜ‌ர் அல் ஹைத்த‌மி அவ‌ர்க‌ள் குறித்து சிற‌ப்புச் சொற்பொழிவினை காய‌ல் மௌல‌வி முஹ‌ம்ம‌து சுலைமான் லெப்பை ஆலிம் ம‌ஹ்ள‌ரி அவ‌ர்க‌ள் நிக‌ழ்த்தினார். அல்லாமா இப்னு ஹ‌ஜ‌ர் அல் ஹைத்த‌மி அவ‌ர்க‌ள் எகிப்தின் ஹைத்த‌ம் ந‌க‌ரில் பிற‌ந்த‌தின் கார‌ண‌மாக‌ ஹைத்த‌மி என‌ அழைக்க‌ப்ப‌டுகிறார். த‌லைசிற‌ந்த‌ மார்க்க‌ ச‌ட்ட‌ வ‌ல்லுந‌ராக‌ திக‌ழ்ந்த‌வ‌ர். இன்ற‌ள‌வும் அவ‌ர்க‌ள‌து மார்க்க‌ ச‌ட்ட‌ விள‌க்க‌ங்க‌ளைப் அறிஞ‌ர் பெரும‌க்க‌ள் பின்ப‌ற்றி மார்க்க‌த் தீர்ப்பு வ‌ழ‌ங்கி வ‌ருவ‌த‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ள‌து மார்க்க‌ ஞான‌ம் குறித்து அறிந்து கொள்ள‌லாம். 65 ஆண்டுக‌ள் இவ்வுல‌கில் வாழ்ந்த‌ அவ‌ர்க‌ள் ம‌க்காவில் ஜ‌ன்ன‌த்துல் ம‌ஹ‌ல்லாவில் அட‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

ஸ்கை குரூப் இய‌க்குந‌ர் செய்ய‌து எம். அப்துல் காத‌ர் அவ‌ர்க்ள் க‌ல்வியின் முக்கிய‌த்துவ‌ம் Buy cheap Amoxil குறித்தும், சிவ‌க‌ங்கைச் சீமையை ஆண்ட‌ வேலுநாச்சியாருக்கு அப்ப‌குதி ஆங்கிலேய‌ர்க‌ளால் ஆக்ர‌மிக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர் அப்ப‌குதியை மீட்க‌ திப்புசுல்தான் உத‌விய‌தையும் நினைவு கூர்ந்தார். ச‌மீப‌த்தில் வேலுநாச்சியார் குறித்து தெரிவித்த‌ ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்வில் இத்த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெற‌வில்லை என்றார். த‌ற்பொழுது செம்மொழி மாநாட்டில் இத்த‌க‌வ‌ல்க‌ள் இட‌ம்பெற்றுள்ள‌து பாராட்டுக்குரிய‌து என்றார்.

இஸ்மாயில் பிலாலி ஆன்மிக‌ப்பாட‌ல் பாடினார்.

நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌னர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

Add Comment