கல்வி உதவித்தொகை 2010 – 2011

கடந்த இரண்டு வருடங்களாக கல்வி உதவித்தொகை ஏற்பாடு செய்யும் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துணை அமைப்பான சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ( SEED TRUST ) 2009 – 2010 ம் கல்வியாண்டில் தமிழகத்தின் பல்வேறு வட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஐக்கிய ஜமாத்துக்கள் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க உதவியது. இவ்வருடம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஜமாத்களை நேரடியாக ஈடுபடுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் பங்குத் தொகையாக ரூ. 10,000 தயார் செய்து தகவல் முன்னதாக தரும் ஒவ்வொரு ஜமாத்திற்கும் மாவட்ட கூட்டமைப்பின் மூலம் மேலும் ரூ. 15,000 வரை கிடைக்கும். கிடைக்கும் சுமார் ரூ. 25,000க்கு அந்தந்த ஜமாத்கள் தாங்களாகவே ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து மாவட்டத்தில் ஒரு இடத்தில் நடைபெறும் விழாவில் பெறலாம். பெரிய ஜமாத்கள், சிறிய நகரங்கள் கூடுதல் பங்குகளை பெறலாம். இவ்வருடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன் மாதிரியாக சுமார் 40 ஜமாத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து ரூ.10 லட்சம் வரை உதவ இருப்பதால் மேற்கண்ட கல்விப் பணியில் ஆர்வமுள்ள ஜமாத்துக்கள் அந்தந்த மாவட்ட ஐக்கிய ஜமாத் நிறுவ வேண்டுகிறோம். அதிக கல்வி உதவித்தொகை தேவை உள்ளோர் பைத்துல்மால் தொடங்கி அதிக மாணவர்களுக்கு உதவலாம்.

கடந்த இரண்டு வருடமாக கல்வி உதவித்தொகை பெறாத மாவட்டங்கள் மாவட்ட அமைப்புகளை ஏற்படுத்தி கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் நெ. 27, உட்ஸ் சாலை, சென்னை – 02

மதுரை : ராஜா ஹசன் : 944 322 6347

திருச்சி : எம்.எம். ஷாகுல் ஹமீது : 98 424 42368

Buy cheap Cialis justify;”>இராமநாதபுரம் : மௌலவி பஷீர் சேட் : 944 3610495

நெல்லை : இன்ஜினியர் சையது அகமது : 944 39 15000

சென்னை : எஸ்.எம். இதாயத்துல்லா 98 400 400 67

Add Comment