கடையநல்லூரில்( கொமந்தாபுரம் பகுதியில்) இன்று அரசு பஸ்- லாரி மோதல்; 25 பயணிகள் காயம்

கடையநல்லூரில் இன்று 

அரசு பஸ்- லாரி மோதல்;

25 பயணிகள் காயம்
கடையநல்லூர்,
 நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து திருப்பூருக்கு அரசுபஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை சிவகிரியை சேர்ந்த மூக்கையா(வயது35) ஓட்டிச்சென்றார். காலை 9.30 மணியளவில் கடையநல்லூர் கொமந்தாபுரம் பகுதியில் பஸ் வந்தது. அப்போது அரசு பஸ்சும், அவ்வழியாக எதிரேவந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் Amoxil online அரசுபஸ் டிரைவர் மூக்கையா, கண்டக்டர், லாரிடிரைவர், பஸ்சில் பயணம்செய்துவந்து பயணிகள்25பேர் உள்பட 28பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தவிபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி-மதுரை மெயின்ரோட்டில் இந்த விபத்து நடந்ததால் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Add Comment