டீயின் விலை ரூ1 ! அசத்தும் வியாபாரி !

டீயின் விலை ரூ1 ! அசத்தும் வியாபாரி !


கீழக்கரை.மே 1. தமிழகம் முழுவதும் டீயின் விலை குறைந்தது ரூ5க்கு விற்கபடுகிறது.இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்த மன்சூர்கான்(35) என்பவர் கீழக்கரை சாலை தெரு பகுதி தெருவோரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார்.இவர் கடையில் ஒரு டீ ரூ 1க்கு விற்பனை செய்து அனைவரை ஆச்சரியபடுத்துகிறார்.டீயின் Buy Lasix Online No Prescription சுவையும் நன்றாக உள்ளதாக கடைக்கு வருபவர்கள் கூறுகின்றனர்.இதனால் இவரின் கடையில் இடைவிடாத வியாபாரம் நடைபெறுகிறது. ஒவ்வொரு டீக்கும் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய அட்டை டம்ளரைத்தான் பயன் படுத்துகிறார் .
இது குறித்து இந்த ரோட்டோர கடையை நடத்தும் மன்சூர் கூறியதாவது, ஒரு லிட்டர் ரூ32க்கு வாங்கி அதில் 72டீ தயார் செய்கிறேன்.நாளொன்றுக்கு 700 டீ விற்பனையாகிறது.நான் தனியாளாக இருந்து செயல்படுவதால் எனக்கு செலவு அதிகமில்லை .நல்ல லாபமும் கிடைக்கிறது.பத்து நாளில் நஷ்டம் ஏற்பட்டு வியாபாரத்தை நிறுத்தி விடுவாய் என்று நண்பர்கள் கூறினார்கள்.ஆனால் தொடர்ந்து 4 மாதங்களாக வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முஜிப் கூறுகையில். ரூ 1க்கு டீ என்ற போது முதலில் நம்பவில்லை.தற்போது நானும் இக்கடையின் ரெகுலர் கஸ்டமராகி விட்டேன் என்றார்.

நன்றி : கீழக்கரை டைம்ஸ்

Add Comment