ஜப்பான் அணி அசத்தல் வெற்றி

டென்மார்க் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, “ரவுண்ட் ஆப் 16′ சுற்றுக்கு தகுதிபெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் காமரூன் அணியை வீழ்த்தி, “ஹாட்ரிக்’ வெற்றி கண்ட நெதர்லாந்து அணி, Buy Bactrim Online No Prescription “ரவுண்ட் ஆப் 16′ சுற்றுக்கு முன்னேறியது.
தென் ஆப்ரிக்காவில், 19வது “பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று ரஸ்டன்பர்க் நகரில் நடந்த “இ’ பிரிவு லீக் போட்டியில், உலக தரவரிசையில் 36வது இடத்தில் உள்ள டென்மார்க், ஜப்பான் (45வது இடம்) அணிகள் மோதின. தலா 3 புள்ளிகளுடன் களமிறங்கிய இந்த அணிகள், “ரவுண்ட் ஆப் 16′ சுற்றுக்கு முன்னேற, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடின.
ஜப்பான் ஆதிக்கம்:
துவக்கத்தில் இருந்தே ஜப்பான் அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிடைத்த “பிரி கிக்’ வாய்ப்பில், ஜப்பான் வீரர் ஹோன்டா ஒரு சூப்பர் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். பின்னர் 30வது நிமிடத்தில் கிடைத்த “பிரி கிக்’ வாய்ப்பில் என்டோ ஒரு கோல் அடிக்க, ஜப்பான் அணி வலுவான முன்னிலை கண்டது. தொடர்ந்து போராடிய டென்மார்க் வீரர்களால், பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு “பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதனை ஜப்பான் கோல்கீப்பர் கவாஷிமா அருமையாக தடுத்தபோதும், பந்தை கைப்பற்ற தவறியதால், டென்மார்க் வீரர் டொமாசன் கோலாக மாற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் வீரர் ஒகாசாகி, 87வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டநேர முடிவில் ஜப்பான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 லீக் போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வி உட்பட 6 புள்ளிகள் பெற்ற ஜப்பான் அணி, “ரவுண்ட் ஆப் 16′ சுற்றுக்கு “இ’ பிரிவில் இருந்து 2வது அணியாக தகுதிபெற்றது. லீக் சுற்றில் ஒரு வெற்றி மட்டும் கண்ட டென்மார்க் அணி, தொடரில் இருந்து வெளியேறியது.

Add Comment