நெல்லை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது.

நெல்லை மாநகராட்சி யில் 353 வாக்குச்சாவடிகளும், நகராட்சியில் 85 , டவுன் பஞ்சாயத்துகளில் 312 , ஊரக பகுதிகளில் ஆயிரத்து 31 வாக்குச்சாவடி களுமாக மொத்தம் 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 ஆயிரத்து 736 பேர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவை முன் னிட்டு வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குச்சீட்டு கள், ஸ்டிக்கர்கள், வாக்குப்பெட்டிகள், சணல் உள் ளிட்ட 72 பொருட்கள் மண் டல அலுவலர்கள் மூலம் நேற்று காலை எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளின் தலை மை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் வாக்குப்பதிவிற்கு தேவை யான அனைத்து முன்னேற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் போது வாக்குச¢சாவடி வளாகத்தில் இருக் கும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விட்டு வாக்குப்பதிவை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் கட்ட தேர்தலில் நெல்லை மாநகராட்சியில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 227 பேரும், நகராட்சிகளில் 59 ஆயிரத்து 222 பேரும், டவுன் பஞ்சாயத்துகளில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 734 பேரும், ஊரக பகுதிகளில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 390 வாக்காளர்களுமாக மொத்தம் 10 லட்சத்து 42 ஆயிரத்து 573 பேர் வாக்களிக்கின்றனர்.
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு 14 பேரும், 55 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 425 பேரும், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் பதவிக்கு 13 பேரும், நகராட்சிகளில் 42 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 261 பேரும், 18 டவுன் பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்கு 153 பேரும், 282 கவுன்சிலர் பதவிகளுக்கு ஆயிரத்து 171 பேரும், 12 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 70 பேரும், பஞ். யூனியன்களில் 120 கவுன்சிலர் பதவிகளுக்கு 687 பேரும், 194 கிராம பஞ். தலைவர் பதவிக்கு 833 பேரும், ஆயிரத்து 267 வார்டு கவுன¢சிலர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 754 பேருமாக 1993 பதவிகளுக்கு 7 ஆயிரத்து 381 பேர் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் 442 பேர் போட்டியின்றி ஏற் கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு நெல்லை மாநகரம், மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
14 ஆவணங்களை காட்டி
வாக்களிக்கலாம்
உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் இல்லாதவர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடிகளில் பூத் சிலிப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூத் சிலிப் இல்லாதவர்கள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 14 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம்.

நெல்லை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது. 2 ஆயிரத்து 361 பதவிகளுக்கு 8 ஆயிரத்து 821 பேர் களத்தில் உள்ளனர். 1781 வாக்குச்சாவடிகளில் 10.42 Bactrim online லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. நெல்லை மாநகராட்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், 18 டவுன் பஞ்சாயத்துகள், 9 பஞ். யூனியன்களில் இன்று தேர்தல் நடக்கிறது.

Add Comment