109 முறை வாய்தா வாங்கி பெங்களூருக்கு முதல் முறையாக வரும் ஜெ.வுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பு

சொத்துக் குவிப்பு Buy Viagra Online No Prescription வழக்கில் 109 முறை வாய்தா வாங்கிய முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் முறையாக பெங்களூர் சிறப்பு கோர்ட்டுக்கு நேரில் ஆஜராக வருவதால் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்காக விமான நிலையத்திலிருந்து கோர்ட்டுக்கு வரும் பாதை நெடுகிலும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தி்ல உள்ள கோர்ட் வளாகத்தைச் சுற்றி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து 500 போலீஸார்

அந்தப் பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்திலிருந்து 500 போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்க பெங்களூர் வந்துள்ளனர்.

15 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 109 முறை ஜெயலலிதா வாய்தா வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment