விஜயகாந்த்தின் சொந்த ஊரான மதுரையில் ஒரு வார்டில் கூட வெல்லாத தேமுதிக

மதுரை மாநகராட்சியில் ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில், 13 வார்டுகளில் வென்று அனைவரையும் Bactrim No Prescription ஆச்சரியத்தில் ஆழ்த்திய கட்சி தேமுதிக. ஆனால் இப்போது அக்கட்சிக்கு மதுரையில் ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை. அதுவும் கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான தோல்வியை கட்சி சந்தித்திருப்பதால் தேமுதிகவினர் பெரும் கவலையடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி தற்போதைய தேர்தலி்ல 100 வார்டுகளாக விரிவடைந்து தேர்தலை சந்தித்தது. அனைத்து வார்டுகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. கடைசி நேரத்தில் சிபிஎம், சிபிஐ ஆகியவை தேமுதிக கூட்டணிக்கு வந்ததால் இந்தக் கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தேமுதிகவுக்குப் பலம் கிடைக்கும். குறைந்தது கடந்த முறை வென்ற இடங்களாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் கூட்டணி அரசியலில் குதித்து குழம்பிப் போய் நிற்கும் தேமுதிகவுக்கு, இந்தத் தேர்தலில் மதுரை மக்கள் பட்டை நாமம் போட்டு விட்டனர்.

100 வார்டுகளிலும் தேமுதிக தோல்வி அடைந்திருப்பது அந்தக் கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கிடையே, அந்தக் கட்சியின் மேயர் வேட்பாளர் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Add Comment