நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 295 பேர் “டெபாசிட் இழப்பு”

நெல்லை: நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் 86 பேரும், நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தலில் 295 பேரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து வார்டு தேர்தலில் மொத்தம் 26 வார்டுகளில் 23 இடங்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றனர். 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 21, 23, 24, 25 மற்றும் 26 ஆகிய 23 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.

இதில் 5வது வார்டில் மதிமுக, 20வது வார்டில் திமுக, 22வது வார்டில் Lasix No Prescription காங்கிரஸ வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மொத்தமுள்ள 26 வார்டுகளில் 150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 21வது வார்டில் 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 150 வேட்பாளர்களில் 86 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். அனைத்து வார்டுகளிலும் மொத்தம் 60,000 செல்லாத ஓட்டுகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக ஒரு வார்டில் 3,297 செல்லாத ஓட்டுகள் பதிவாகியிருந்தது.

Add Comment