அதிகாரிகளை அசரவைத்த அழகிரி

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அழகிரி கலந்து கொள்வதில்லை; டில்லியிலேயே அமைச்சர் தங்குவதில்லை, எந்த நேரமும் மதுரையில் உள்ளார்’ என்று அழகிரி குறித்து பலவிதமான செய்திகள் டில்லி அரசியல் வட்டாரங்களிலும், அதிகாரிகள் மத்தியிலும் பேசப்பட்டு வந்தன. ஆனால், சமீபத்தில் அழகிரியின் செயல்களை பார்த்துவிட்டு Buy Doxycycline அவருடைய அமைச்சக அதிகாரிகளும், கேபினட் செயலகத்தின் அதிகாரிகளும் வியந்து போயுள்ளனர்.போபால் விஷவாயு தொடர்பாக அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அழகிரியும் ஒரு உறுப்பினர். அவருடைய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம், இந்த குழுவின் கூட்டத்தில் சில திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதிரடியாக செயலில் இறங்கினார் அமைச்சர் அழகிரி. போபால் விஷவாயு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் உடனடியாக கேட்டார்.போபாலில் என்ன நடந்தது என்பது குறித்து நூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் அறிக்கை அவரிடம் கொடுக்கப்பட்டது. அனைத்தையும் படித்து, இனி என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் பல மணி நேரம் ஆலோசித்து அறிக்கை தயார் செய்தார் அழகிரி. இவருடைய அதிரடி நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.டில்லி அரசியலில் அழகிரி அதிக நாட்கள் இருக்க மாட்டார் என்று சொல்லப்பட்டதெல்லாம் இப்போது பழைய கதை, டில்லி அரசியலை அழகிரி புரிந்து கொண்டார், இனிமேல் டில்லியை கலக்குவார் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Add Comment