கனிமொழி ஜாமீன் மனு : நவ. 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 கனிமொழி ஜாமீன் மனு : நவ. 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுதில்லி, அக்.24 (டிஎன்எஸ்) 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமின் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று (அக்.24) மதியம் 2 மணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் buy Levitra online நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஜாமீனில் விடுவிக்குமாறு கனிமொழி தாக்கல் செய்திருந்த மனு மீது நவம்பர் 3-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். அவரது ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. 2ஜி வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகையும் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இதனால் கனிமொழி ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்று கூறுவதற்கு இடமில்லை. எனவே அவரை தொடர்ந்து காவலில் வைத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் சிபிஐ தரப்பில் இதுதொடர்பாக பதிலளிக்கப்பட்டது. அதில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என  தெரிவிக்கப்பட்டது.

2ஜி வழக்கில் 13 -ல் இருந்து 17-வது குற்றவாளி வரை உள்ளவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என சிபிஐ தெரிவித்தது.

இந்த 5 பேரில் கலைஞர் டிவியின் சரத்குமார், கரீம் மொரானி, ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோர் உள்ளனர்.

எனினும் ஷாகித் பல்வா மற்றும் ஆ.ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரின் ஜாமீன் மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சிபிஐ குறிப்பிட்டது.

சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காததையடுத்து கனிமொழிக்கு இன்று ஜாமீன் வழங்கப்படும் என்று திமுகவினர் எதிர்பார்த்தனர். எனினும் தீர்ப்பை நவம்பர் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னதாக தீபாவளிக்கு அவர் வெளியாகி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தீபாவளியை திகார் சிறையிலேயே கனிமொழி கழிக்க வேண்டியதை எண்ணி அவர்கள் மனம் கலங்கினர்.

Add Comment