தலைகீழாக தொங்கி தண்ணீரில் இந்திய வரைபடம் வரைந்த தொழிலாளி

Buy Amoxil Online No Prescription alt=”” width=”218″ height=”300″ />தூத்துக்குடி, கோவில்பட்டியில் நேற்று, மத ஒற்றுமையை வலியுறுத்தி கட்டட தொழிலாளி, கயிறு மூலம் தலைகீழாய் தொங்கி, தண்ணீரில் கலர், வெள்ளைப் பொடிகள் மூலம் இந்திய வரைபடம் வரைந்து சாதனை படைத்தார்.கோவில்பட்டி, வடக்கு புது கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முத்துகுமார்(26).

இவர், முட்டை ஓட்டில் தேசத் தலைவர்கள் படம் வரைந்தது, வேப்பங்கொட்டையில் தாஜ்மகால் வரைந்தது, உடலில் இனிப்பு தடவி 100 கட்டெறும்புகளுடன் 12 மணி நேரம் இருந்தது, நீண்ட உயரத்திலிருந்து கண்ணாடித் துண்டுகளின் மீது குதித்து ஒற்றைக்காலில் நின்றது, 100 கட்டெறும்புகளுடன் பாலிதீன் பையில் 7.5 மணி நேரம் இருந்தது, 1,000 கட்டெறும்புகளுடன் சாக்குப்பையில் உணவு உண்ணாமல் ஏழு நாட்கள் இருந்தது உள்ளிட்ட பல சாதனைகளை புரிந்துள்ளார்.

நேற்று காலையில் அவர், கோவில்பட்டி நகர பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள காந்தி மண்டபத்தில், கயிறை கால்களில் கட்டி 25 நிமிடம் தலைகீழாய் தொங்கினார். அவர் முன் இருந்த தண்ணீர் நிரம்பிய தாம்பாளத்தில் கலர், வெள்ளைப் பொடிகளைக் கொண்டு, இந்திய வரைபடம் வரைந்தார். அதில் இந்து, கிறிஸ்துவ, முஸ்லிம் மத சின்னங்களையும் வரைந்தார். மத ஒற்றுமையை வலியுறுத்தி, தலைகீழாக தொங்கி இந்தப் படத்தை வரைந்ததாக அவர் தெரிவித்தார்

Add Comment