லிபியா மக்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணைவாரி போட்டுக்கொண்டனர் -அபு ஆஸிமா

லிபியா அதிபர் யார்? என்று கேட்டால் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்   கூட சொல்வார்கள் , கதாபி என்று புருவத்தை உயர்த்திச் சொல்வார்கள் .ஏனென்றால்,கதாபி அந்த அளவுக்கு தான் ஆட்சி செய்த லிபியா நாட்டை நேசித்தார் ,திறம்பட ஆட்சியும்  செய்தார் .அவர் ஆட்சியில் லிபியா நாட்டு மக்கள் எந்த துன்பத்தையும் காணாமல் வாழ்ந்தார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது . அவர் அந்த நாட்டு மக்களுக்கு செய்த சில திட்டங்களை உங்கள் மத்தியில் பட்டியலிடுகிறேன் உங்கள் சிந்தனைக்காக ,

1 . லிபியா நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது .
2 .சட்டப்படி வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டது .
3 .அதிபர் கதாபியின் தாய் ,தந்தை மற்றும் அவர் மனைவி ஆகியோர் குடிலில்தான் வாழ்ந்தார்கள் .ஆனால் ,அந்த நாட்டு புதுமணத் தம்பதிகள் மகிழ்வுடன் வாழ்க்கையை துவங்க 50000  அமெரிக்க டாலர் மதிப்பிலான லிபியா தினார் 60000 வழங்கப்பட்டது .
4 .அதிபர் கதாபியின் ஆட்சிக்கு முன் 25 %மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர் , ஆனால் அவருடைய ஆட்சியில்    83 % மக்கள் கல்வி அறிவு பெற்றிருந்தனர் .
5 .மக்களின் விவசாயத்திற்கு அனைத்து வசதிகளையும் அரசே இலவசமாக வழங்கியது .
6 .ஒரு லிபியன் கார் வாங்கினால் அந்த காரின் விலையில் பாதியை அரசே கொடுத்தது .
7 .லிபியா நாட்டின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 .40  தினார் மட்டுமே .
8 .ஒரு தாயின் பிரசவகால தேவைக்கு 5000 அமெரிக்க டாலர் மதிப்பிலான தினார்கள் வழங்கப்பட்டன .
9 .உலகத்திலேயே மிகப்பெரிய நதி நீர் திட்டத்தினை உருவாக்கி அந்த பாலைவன பூமியை சோலைவனமாக்கி  உலக மக்களின் உள்ளங்களில் உயர்ந்து நிற்ப்பவார்தான் லிபியா நாட்டு அதிபர் முஹம்மது கதாபி .
இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் . இன்று சவூதி அராபிய அரசு அந்த நாட்டில் பணிபுரியும் மக்கள் தங்கள் வருமானத்தில் சில குறிப்பிட்ட சதவீதம் அங்கேயே செலவு செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை கொண்டுவர பரிசீலித்து வருகிறதே ,அது அந்த கதாபியின் வழிதான் .பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டும் தலை நிமிர்ந்து தன் நாட்டு மக்களை வாழச்செய்த அந்த தலைமகனை ,அந்த நாட்டு மக்கள் கேவலப்படுத்தி கொலை செய்ய காரணம் , அவர் அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் .அந்த நாட்டு மக்கள் அமெரிக்காவின் சூழ்ச்சி Buy Viagra Online No Prescription வலையில் விழுந்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொண்டனர் .

——   அபு ஆஸிமா

Add Comment