திறமையானவர்கள் உருவாக வேண்டும்

ரேடியோ ஜாக்கியாக இருந்து கொண்டே சமூக சேவை செய்யும் ராஜா: என் குடும்பம் சராசரியான மிடில் கிளாஸ் குடும்பம். பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், குடும்பச் சூழல் காரணமாக பொறியியல் கல்லூரியில் சேராமல் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தேன். கல்லூரியில் படிக்கும் போது அரசு வேலை கிடைத்தால் சொகுசாக வாழலாம் என்று கனவு கண்டேன்; ஆனால் கிடைக்கவில்லை. திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன்.என் வாழ்க்கையின் மிகவும் சிரமமான காலம் அது. மூட்டை தூக்கி, பிளாட்பாமில் தூங்கியிருக்கிறேன். ஆனால், இது எனக்கான வேலை இல்லைன்னு புரிஞ்சு, Buy Levitra Online No Prescription சீக்கிரத்தில் வெளியே வந்துவிட்டேன். நண்பரின் மூலம் பள்ளியில் கல்சுரல் இன்சார்ஜா வேலைக்கு சேர்ந்தேன். அந்த சமயத்தில் ஒரு ரேடியோ நிறுவனம், திருச்சியில் ஆட்கள் தேர்வு நடத்திய போது, எனக்கு ஆர்.ஜே.,வாக வேலை கிடைத்தது. இது, என் வாழ்வில் திருப்புமுனை.நான் என் வேலையை சேவையாகச் செய்கிறேன். எனக்கு கிடைத்த பேரையும், புகழையும் கொண்டு கிராமப்புற மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு உதவுகிறேன். கிராமத்திலிருந்து நகரம் வந்து ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக ஒரு பயிற்சி மையம் அமைப்பது என் லட்சியம். நான் ரேடியோவில் என் நிகழ்ச்சிகளுக்கு இடையே, திருச்சியின் அடிப்படை பிரச்னைகளை அவ்வப்போது விவாதிப்பதால், பல பிரச்னைகளும் மாநகராட்சியால் தீர்க்கப்பட்டுள்ளது. நான் இந்த அளவிற்கு முன்னேறியிருக்கேனா, என் தனித்திறமையால் தான். ஆனா, இப்போதெல்லாம், ஆண்டு விழாவில் மட்டுமே திறமையைக் காண்பிக்க ஒரே களம் என்ற நிலை உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மற்ற திறமைகளையும் ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான், நிறைய திறமைசாலிகளை உருவாக்க முடியும்.

Add Comment