துணைமேயர் – மாவட்ட பஞ்., தலைவர் தேர்தல் – பல இடங்களில் போட்டியின்றி அ.தி.மு.க, வெற்றி

தமிழக மாநகராட்சிகளில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் அ.தி.மு.க,.வினரே இருந்ததால் துணை மேயர் பதவிக்கு தி.மு.க., தானாக போட்டியி்ல் இருந்து விலகி ‌கொள்ள வேண்டியதாயிற்று இதனால் அ.தி.மு.க.,வினரே துணைமேயர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதன்படி 14 ஆயிரத்திற்கும் மேலான பதவி தேர்வு செய்யப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு மக்கள் மூலம் நேரிடையாக தேர்வு செய்யப்பட்டனர்.

 

இந்த மேற்கூறிய அமைப்புகளுக்கு துணை தலைவர் பதவி ஏனைய அமைப்புகளான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் , துணை தலைவர் பதவி மற்றும் , ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இன்று தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி கவுன்சிலர்கள் பெருவாரியான ஆதரவு எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவர். தமிழகத்தின் பல்வேறு ஊராட்சி அமைப்புகளில் 60 சதத்திற்கும் மேலாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருப்பதால் பெருவாரியான இடங்களை இந்த கட்சியே கைப்பற்றும் என தெரிகிறது. பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை பதவிக்கு கடும் போட்டி இருக்கிறது. அங்குள்ள சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் தகுதியில் இருக்கின்றனர். இதனால் இவர்களுக்கு செம கவனிப்பும், ராஜ மரியாதையும் கிடைக்கும், ஒத்துவராத சிலர் கடத்தப்படுவர்.

 

அ.தி.மு.க.,துணைமேயர் வேட்பாளர்கள் : சென்னை-பெஞ்சமின் (145 வதுவார்டு கவுன்சிலர்), வேலூர்-தர்மலிங்கம் (45வது வார்டு கவுன்சிலர்), சேலம்-நடேசன் (50 வது வார்டு கவுன்சிலர்), ஈரோடு-பழனிச்சாமி (3வது வார்டு கவுன்சிலர்), திருப்பூர்-குணசேகரன் (31வது வார்டு கவுன்சிலர்).

 

கோவை-சின்னதுரை (86 வதுவார்டு கவுன்சிலர்), திருச்சி-ஆசீக் மீரா (27 வது வார்டு கவுன்சிலர்), மதுரை- கோபாலகிருஷ்ணன் (4வது வார்டு கவுன்சிலர்), திருநெல்வேலி-கணேசன் என்ற ஜெகன்நாதன் (7வது வார்டு கவுன்சிலர்), தூத்துக்குடி-சேவியர் (18வது வார்டு கவுன்சிலர்) இவ்வாறு online pharmacy no prescription அறிக்கையில் கூறியுள்ளார்.

 

சென்னையில் போட்டியின்றி தேர்வு : சென்னை மாநகராட்சி துணை மேயராக அதிமுகவைச் சேர்ந்த பெஞ்சமின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. பெஞ்சமின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கமிஷனர் கார்த்திகேயன் அறிவித்தார். இந்த மாநகராட்சியில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் அ.தி.மு.க., 168 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., 23 பேர் மட்டுமே எனவே போட்டியில் வெற்றி என்பதற்கு வாய்ப்பே இல்லை. மதுரையில் துணைமேயராக அ.தி.மு.க.,‌வை சேர்ந்த கோபால கிருஷ்ணனும், கோவையில் சின்னதுரையும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

 

திருச்சியில் மறைந்த அமைச்சரின் மகன் துணைமேயரானார்: மறைந்த மரியம்பிச்சையின் மகன் ஆஷீஸ் மீரா துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார். போதிய கவுன்சிலர் தி.மு.க.,வுக்கு இல்லாததால் ஆஷீஸ் மீரா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அ.தி.மு.க.,வினர் பலர் வாழ்‌த்து தெரிவித்தனர்,

 

நெல்லையில் துணை மேயர் வேட்பாளர் போட்டியில்லை: திருநெல்வேலி மாவட்டம் துணைமேயர் வேட்பாளர்கள் தொடர்பாக ஆவடையப்பன், டி.பி.எம்.,மைதீன்கான், கருப்பசாமிபாண்டியன், பூங்கோதை ஆகியோர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டன. ஆனால் இந்த கமிட்டியில் உள்ளவர்கள் யாரும் ஒரு முறைகூட சந்தித்து இந்த தேர்தல் குறித்து விவாதிக்கவில்லை. இதனால் துணைமேயர் வேட்பாளர் யாரையும் முடிவு செய்ய முடியாமல் போனது. இதற்கிடையில் மல்லிகை சீனிவாசன் என்பவரை மாநகர தி,மு.க., முடிவு செய்தனர். ஆனால் துணை மேயர் வேட்பாளருக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வை சேர்ந்த கணேசன் என்பவர் உறவுக்காரர் என்பதால் போட்டியில் இருந்து விலகி கொண்டார். இதனையடுத்து ‌கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கமிஷனர் அஜய்யாதவ் அறிவித்தார். இந்த குழப்பத்தின் உச்சிக்குபோன மாஜி எம்.எல்.ஏ.,வும் மாநகர செயலருமான மாலைராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திருத்தங்கல் நகராட்சியில் குலுக்கல் முறையில் தேர்வு : விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் சக்திவேலுவை எதிர்த்து அக்கட்சியின் போட்டி வேட்பாளர் சரவண பெருமாள் போட்டியிட்டார். மொத்தம் 22 ஒட்டில் தலா 11 ஓட்டுக்கள் பெற்றனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டார்.

 

வேட்பு மனுவை அள்ளிச்சென்ற ஒன்றியம் : நரிக்குடி ஊராட்சியில் வேட்பு மனுவை அள்ளிச்சென்ற அ.தி,மு.க., ஒன்றிய செயலரிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தி வருகின்றனர். இங்கு அ.தி,மு.,வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மஞ்சுளாதேவியை எதிர்த்து ஆனந்தவள்ளி போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். இதனால் ஆத்திரமுற்ற ஒன்றிய செயலர் அம்பலம் தனது ஆதரவாளர்களுடன் , வந்து தேர்தல் அதிகாரி வைத்திருந்த வேட்பு மனுவை அள்ளி சென்றார். இவரிடம் போலீசார் பேச்சு நடத்தி வருகின்றனர். இதனால் இங்கு பரரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை நகராட்சியில் துணை சேர்மன் பதவியும் தி.மு.க.,வுக்கு போனது. இந்த நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது. இங்குள்ள மொத்தம் 36 கவுன்சிலர்கள். தி.மு.க.,வேட்பாளர் தமிழ்காந்தன் 20 ஓட்டுக்களும் அ.தி.மு.க.,வேட்பாளர் கண்ணன் 17 ஓட்டுக்களும், பெற்றனர். அருப்புக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஓட்டுக்கள் சரிசமமாக விழுந்தது. இதனையடுத்து குலுக்கல் முறையில் தி.மு.க., கைப்பற்றியது

 

ஓட்டுச்சீட்டுக்கள் கிழிப்பு: சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் 2ம் நிலை நகராட்சியில் துணை தலைவர் பதவி போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் கோபி. இங்கு சுயேச்சை கவுன்சிலர் அதிகம் ( 10 ) என்பதால் , எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தர்மராஜ் ஜெயித்து விடுவாரோ என்ற காரணத்தினால் கோபி ஆத்திரமுற்றார், தொடர்ந்து ஓட்டுக்கள் போடும் நேரத்தில் அங்கு வந்து பதிவான ஓட்டுச்சீட்டுக்களை பறித்து அருகில் உள்ள கழிவுநீர் ஓடையில் வீசினார்,.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

நீலகிரி மாவட்ட நிலவரம் : ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் நகராட்சி துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. மாவட்ட பஞ்சாயத்து தலைவராக மேனகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

தேவாளையில் அ.தி.மு.க., செல்லாத ஓட்டு தி.மு.க.,வு.,க்கு வெற்றி: கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக சாரதாமணி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இம்மாவட்டத்தில் தோவாளை பஞ்சாயத்து யூனியனில் தலைவர் தேர்தலில் அ.தி.மு., போட்ட செல்லாத ஓட்டு தி.மு.க, வுக்கு வெற்றி வாய்ப்பை அளித்தது. கவுன்சிலர்கள் 5க்கு 5 என சரிசமமாக இருந்தனர். இதனால் அ.தி.மு.க, கவுன்சிலர் ஒருவர் செல்லாத ஓட்டு போட்டார். இதில் தி.மு.க.,‌வை சேர்ந்த பூதலிங்கம் வெற்றி பெற்றார்.

தகவல் : நல்லூரான்

Add Comment