ஐ.பி.எல். முறைகேடு: லலித்மோடியின் தலைவிதி 3-ந்தேதி தெரியும்

ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் மற்றும் கமிஷனராக இருந்த லலித்மோடி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவருக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் அளித்த விளக்கம் கிரிக்கெட் வாரியத்துக்கு திருப்தி அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து லலித் மோடியை முற்றிலும் ஐ.பி.எல். அமைப்பில் இருந்து கழற்றி விட முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் Buy Levitra சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

இந்த கூட்டத்தில் லலித் மோடியின் தலைவிதி முடிவு செய்யப்படும். சஸ்பெண்டு செய்யப்பட்ட அவர் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லலித்மோடி பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதை ஐ.பி.எல். அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர் நீக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

ஐ.பி.எல். அமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மோடி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஐ.பி.எல். போட்டியின்போது லலித்மோடியின் டாக்சி பில் மட்டும் ரூ.40 லட்சம் ஆகும். போட்டி நடக்கும் இடங்களுக்கு அவர் விலை உயர்ந்த பெர்சிடஸ் பென்ஸ் அல்லது பி.எம்.டபிள்யூ. காரில்தான் சென்றுள்ளார். இதனால் அவர் காரில் சென்ற வகைக்கு மட்டும் ரூ.40 லட்சம் ஆகியுள்ளது.

Add Comment