அப்துல் கலாமை புறக்கணித்த செம்மொழி மாநாடு

ரோம் நகர் எரிந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த நாட்டு மன்னன் நீரோ   பிடில் வாசித்துக்கொண்டு இருந்தார் என்பதை வரலாற்றில் படித்து இருப்போம். அதேபோன்று ஈழம் அழிந்து கொண்டு இருக்கும் பொழுது இங்கே செம்மொழி மாநாடு நடைபெறுவதை புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ் ஆர்வலர்களும், ஈழ தமிழ் உணர்வாளர்களும், எதிர்த்தனர்.

அதனையும் மீறி தி.மு.க அரசு உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தி வருகிறது. இந்த மாநாடு மொழி மாநாடாக மட்டும் இருக்க வேண்டும். கட்சி மாநாடாக இருந்து விட கூடாது என  முதல்வர் அறிவித்த பிறகு தி.மு.க கொடிகளும் தோரணங்களும் தவிர்க்கப்பட்டது. இதனை அனைவரும் வரவேற்றனர்.

உலக தமிழ் மாநாட்டிற்கு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் ஆதரவு தெரிவித்து மாநாடு வெற்றி அடைய வாழ்த்து செய்தியும் அனுப்பி உள்ளனர் இந்த வேளையில் நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்தூல் கலாம் அவர்கள் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டு உள்ளதை கண்டு தமிழ் நாட்டு மக்களும், உலக தமிழர்களும் வெட்கப்பட்டு வேதனை அடைந்து உள்ளனர்.

இந்தியாவின் உயர்ந்த பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர், இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற தமிழர். மேலும் தான் குடியரசு தலைவாராக  பதவி ஏற்றபோது திருக்குறளின் பெருமைகளை எடுத்துக் காட்டாக எடுத்து கூறி பதவி ஏற்றவர். தனது பதவி காலத்தில் எளிமையாக  பதவியை வகித்தவர்.

இவரின் மூலம் தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் பெருமையும் புகழும் கிடைத்தது. தன் வாழ்நாள் முழுவதும் இந்த தேசத்திற்காக பாடுபட்டு நமது இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் அதனை இளைய சமுதாயம் பின்பற்ற செயல்படுத்தியும் வருபவர்.

இந்தியா அணுகுண்டு சோதனையில் வெற்றி பெறவும், விண்வெளி ஆய்வில் தன்நிறைவு பெறுவதற்கும், ஏவுகணை சோதனையில் வெற்றி அடைவதற்கும் காரணமாக இருந்த தமிழர்.தனது பதவிக்காலம் முடிந்த பிறகு தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் பயன்படும் வகையில் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வருபவர்.

அப்துல் கலாம் அவர்களால் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து வரும் வேளையில் தற்பொழுது நடைபெறும் உலக தமிழ் மாநாட்டில் பாராட்டப்பட்டு பெருமைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ள நபர் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளது வேதனை  அளிக்கிறது.

கோவையில் நடைபெறும் இந்த செம்மொழி மாநாட்டில் பல்வேறு ஆய்வு அரங்கங்கள் விழாக்கள் நடைபெறும் நிலையில் எதாவது ஒரு நிகழ்வில் அப்துல் கலாம் அவர்கள் பங்கு பெறுவதற்கு தமிழக முதல்வர் முயற்சி மேற்கொண்டு இருந்து இருக்கலாம்.

குறிப்பாக தொடக்க விழா, நிறைவு விழா, தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கு, இளைய சமுதாய மேம்பாட்டு கருத்தரங்கு, போன்ற எதாவது ஒரு கருத்தரங்கில் பங்கு பெற வைத்து பாராட்டி பெருமைப்படுத்தி இருக்கலாம்.

கோவையில் நடைபெற்றுவரும் உலகத்  தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்துல் கலாம் அவர்கள் பங்கு கொள்ளாதது  மணமகன் இல்லாத திருமணம்  போன்றது. Buy cheap Lasix

Add Comment