புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: கனமழை தொடரும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் 90 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.

 

பிற இடங்களில் பதிவான மழையின் அளவு (மில்லி மீட்டரில்): திருத்துறைப்பூண்டி- 70, அதிராமபட்டினம், அறந்தாங்கி, கன்னியாகுமரி- 60, வல்லம், முத்துப்பேட்டை, மயிலாடுதுறை, திருமயம், தொண்டி, அம்பாசமுத்திரம், சிவகிரி, பாளையங்கோட்டை, மணியாட்சி, உத்தமபாளையம், திருப்புவனம்- 50, விருத்தாசலம், காரைக்கால், நன்னிலம், கொல்லிடம், ராதாபுரம், நாங்குனேரி, தூத்துக்குடி, விளாத்திக்குளம், கழுகுமலை, சாத்தூர், விருதுநகர்- 40, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருப்பத்தூர், போடிநாயக்கனூர், ஆண்டிப்பட்டி, மருங்காபுரி, குன்னூர், கோவை, நாகர்கோவில், கோவில்பட்டி, சங்கரன்கோவில், செங்கோட்டை, புதுக்கோட்டை, சீர்காழி, திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை- 30, மதுரை, பெரியார் அணை, வத்திராயிருப்பு, திருச்சுழி, ராஜபாளையம், மானாமதுரை, இளையாங்குடி, திருமங்கலம், வாடிப்பட்டி- 20, ராமேசுவரம், சென்னை, மகாபலிபுரம், பொள்ளாச்சி, திருப்பூர், வால்பாறை, பெரம்பலூர், தேனி, தேவக்கோட்டை, திருச்சி, சோழவந்தான், கொடைக்கானல்- 10. திருநெல்வேலியில்… மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 6,245 கனஅடி நீர்வரத்து உள்ளது. திங்கள்கிழமை மாலை நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம்: பாபநாசம் அணை- 83.4, சேர்வலாறு அணை- 107.21 அடி, மணிமுத்தாறு அணை- 46.75 அடி, கடனாநதி அணை- 80 அடி, Lasix No Prescription ராமநதி அணை- 66 அடி.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் சிந்துபூந்துறைப் பகுதியில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. எனினும், கோவில் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

வண்ணார்பேட்டை, மீனாட்சிபுரம், கைலாசபுரம் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில்… தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரியில்… கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலமணக்குடி, குறும்பனை, ராமன்துறை உள்ளிட்ட கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை. குலசேகரத்தில் ரப்பர் பால்வெட்டும் பணிகளும், ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல்சூளைப் பணிகளும், தாமரைக்குளம் பகுதியில் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டன.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 694 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 428 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. கோதயாற்றிலும், திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒருவர் பலி:தேனி மாவட்டம், கோம்பை அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி, அப்பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் ஜீவானந்தம் (50) சனிக்கிழமை உயிரிழந்தார். ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம், தேனி பகுதிகளில் மொத்தம் 53 வீடுகள் சேதமடைந்தன. பெரியாறு அணையில் நீர்மட்டம் 123.5 அடியாக இருந்தது. வைகை அணை நீர்மட்டம்-63.12 அடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம்- 86.59 அடி.

 

 

வானிலை முன்னறிவிப்பு கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்து, இலங்கையிலிருந்து வட தமிழகப் பகுதியை ஒட்டியுள்ள வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் வடகிழக்கு – கிழக்கு திசைகளில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்று வீசும். இதேபோல தென்கிழக்கு – கிழக்கு திசைகளில் இருந்து மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை தென் தமிழகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகக் கடற்கரை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டின் உள்பகுதியிலும், தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Add Comment