உங்களுக்கான உலக “நம்பர்’வேண்டுமா?

மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. www.7billionandme.org என்ற அந்த இணையதளத்தில் நீங்கள் நுழைந்து, உங்கள் வயது, பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், தற்போதைய முகவரி கொடுக்க வேண்டும்.இந்தத் தகவல்களை நிரப்பிய உடன் உங்களுக்கான, “நம்பர்’ கிடைக்கும். இது, உலகத்தில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதைக் குறிக்கும் எண்.ஐ.நா.,வின் மக்கள் தொகை பிரிவு, மக்கள் தொகை நிதியமைப்பு, க்ளோபல் பூட் பிரின்ட் உள்ளிட்ட ஐ.நா.,வின் பிற அமைப்புகள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த எண் உங்களுக்கு வழங்கப்படும்.எந்தெந்த ஆண்டுகளில் அல்லது தேதிகளில் உலகத்தின் மக்கள் எண்ணிக்கை எந்தத் தொகையைத் தொட்டது என்பதையும் இந்த இணையதளம் Buy Ampicillin Online No Prescription மூலம் நீங்கள் அறிய முடியும். உதாரணத்திற்கு, உலக மக்கள் தொகை, 594 கோடியே, 95 லட்சத்து, 6,870 பேராக ஆன போது, இந்த உலகில் இருந்து, 9 லட்சத்து, 9,804 உயிரினங்கள் அழிந்து போனதாக இந்த இணையதளம் தகவல் தருகிறது.இதுபோன்ற பல சுவாரசியமான தகவல்களையும் இதில் நீங்கள் பெறலாம்.

தகவல் : நல்லூரான்

Comments

comments

Add Comment