வடகிழக்கு பருவமழை தீவிரம் 13 மாவட்டத்தில் கனமழை பெய்யும்

சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதையடுத்து, கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் Buy Levitra தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக, 3 முறை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினது. தற்போது, 3வது காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக நேற்று தமிழகத்தில் மண்டபம் பகுதியில் 170 மிமீ மழை பெய்துள்ளது.

சீர்காழி, பாம்பன் 90 மிமீ, அதிராம்பட்டினம், மயிலாடுதுறை, ராதாபுரம், தூத்துக்குடி 60 மிமீ, செம்பரம்பாக்கம், பாபநாசம், லால்குடி, உசிலம்பட்டி 50 மிமீ, சிதம்பரம், காரைக்கால், திருவாரூர், தரங்கம்பாடி, வேதாரண்யம், சாத்தாங்குளம், பூதப்பாண்டி, வாழப்பாடி 40 மிமீ, சென்னை விமான நிலையம், தாம்பரம், காட்டுமன்னார்குடி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி விமான நிலையம், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், தஞ்சாவூர், மன்னார்குடி, நன்னிலம், கொள்ளிடம், நாகப்பட்டினம், கரம்பைக்குடி, மணல்மேல்குடி, ராமநாதபுரம்,

மணிமுத்தாறு, சிவகிரி, திருச்செந்தூர், நாகர்கோயில், விருதுநகர், திண்டுக்கல் 30 மிமீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், மாமல்லபுரம், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், காஞ்சிபுரம், திருத்தணி, பள்ளிப்பட்டு, கடலூர், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம், வானூர், கன்னியாகுமரி, வேலூர், சங்ககிரி, குன்னூர், மதுரை விமான நிலையம், 20 மிமீ, சென்னை டிஜிபி அலுவலகம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர், தாமரைப்பாக்கம், ராமேஸ்வரம், பாளையங்கோட்டை, கோவை, மேட்டுப்பாளையம், திருச்சி, மேலூர், சோழவந்தான், அருப்புக்கோட்டை, ராஜாபாளையம் 10 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசையில் நகர்ந்து குமரிக் கடல் முதல் ஆந்திரா வரையிலான மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Add Comment