திமுக ஆவல் நிறைவேறவில்லை :கனிமொழி ஜாமின் மனு நிராகரிப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி எம்.பிக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.  ஆனால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

கனிமொழி உட்பட 8 பேர் மீதான ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது.   ஜாமீனை நிராகரித்து மறு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆன கனிமொழி எம்.பி., 160 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார்.     இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.

சுவான், டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில் விடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது, 3-ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது.

கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

அப்போது சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கனிமொழி உள்பட 5 பேருக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற காரணத்தை தெரிவித்தனர்.

இதை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்து கொண்டது. சிபிஐ விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி இன்று  விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டி.ஆர். பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி உள்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் டெல்லி சென்றார்கள்.

இந்நிலையில், இன்று நடந்த விசாரணையில் கனிமொழி உள்ளிட்ட எட்டு பேரின் ஜாமின் மனுவையும் நிராகரித்து நீதிபதி ஓ.பி. சைனி Buy cheap Bactrim உத்தரவிட்டார். மேலும், வரும் 11ம் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணை தொடரும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பெண் என்பதால் மட்டுமே சலுகை (ஜாமின்) காட்டப்படவேண்டும் என்ற கற்பனை வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று, கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பில் நீதிபதி சைனி விளக்கமளித்துள்ளார்.

டில்லி ஐகோர்ட்டில் தி.மு.க., மேல்முறையீடு:

கனிமொழி ஜாமின் மனு மீதான சி.பி.ஐ., கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தி.மு.க., மேல்முறையீடு செய்யவுள்ளது

Add Comment