அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முக்கியத்துவம் என்ன ? ஜெயாவுக்கு விளங்குமா ?

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக ரூ.200 கோடியில் தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன.

நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் விவரம்:

தரைத் தளம் பிரெய்லி பிரிவு (பார்வையற்றோருக்கான புத்தகங்கள்), புத்தகம் கொண்டு Doxycycline No Prescription வந்து படிக்கும் பிரிவு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கானப் புத்தகங்கள்.

முதல் தளம் இதழ்கள், குழந்தைகள் பிரிவு, இரண்டாவது தளம்   தமிழ்ப் புத்தகங்கள்,

 மூன்றாவது தளம்   கணினி அறிவியல், நூலகத் தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், சமூகவியல், மதங்கள், புள்ளியியல், அரசியல் அறிவியல்.

 நான்காவது தளம்   பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், இலக்கியம்.

 ஐந்தாவது தளம்   பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மருத்துவம்.

 ஆறாவது தளம்   பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக் கலை, நுண் கலை, விளையாட்டு.

 ஏழாவது தளம்   வரலாறு, புவியியல், சுற்றுலா, பயண மேலாண்மை.

எட்டாவது தளம்   நிர்வாகப் பணிகள் தொடர்பான பிரிவுகள்.

 இவை தவிர திறந்தவெளி அரங்கம், பிரமாண்ட உள் அரங்கம், சிறிய நிகழ்ச்சிகள் நடத்த கருத்தரங்க அறை, குழந்தைகளுக்கான விளையாட்டுகளுடன் கூடிய படிக்கும் பிரிவு என முழுக்க முழுக்க நூலகத்துக்காக எழுப்பப்பட்டது

இந்தக் கட்டடம். நூலகத்துக்கு என்று இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவரின் அகலம், கட்டட உயரம், ஸ்திரத்தன்மை என்று அனைத்தும் அதைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளன.

ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

Add Comment