திமுகவை யாரும் தொட்டுப்பார்க்கவும் முடியாது: அசைக்கவும் முடியாது: மு.க.ஸ்டாலின்


பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க.வினரை சந்திப்பதற்காக, அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பாளையங்கோட்டை மத்திய சிறைக்குல காலை 10.58 மணிக்கு வந்தார்.

பாளை சிறையில் இருக்கும் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன், வி.கே.குருசாமி, பொட்டு சுரேஷ் ஆகியோரைசந்தித்தார்.

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சுப.தங்கவேலன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு எம்பி, பூங்கோதை, கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலின், இந்த முறை நீங்கள் கேளுங்கள் நான் பதில் சொல்லுகிறேன் என்று நிருபர்களை பார்த்து கூறினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து கேட்டபோது, அதற்கு கோர்ட் தடை ஆணை உள்ளது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

அங்கே உள்ள நூல்கள் குறைந்த விலையில் வாங்கி, கூடுதல் விலைக்கு வாங்கியதாக கணக்கு Amoxil online காட்டப்பட்டுள்ளதாக சென்னையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே என்ற கேள்விகு பதில் அளித்த அவர், அந்த பத்திரிகையை நான் பார்க்கவும் இல்லை. படிக்கவும் இல்லை என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவு குறித்து கேட்டபோது, ஜெயலலிதா ஆணவம், அராஜகம் இவைகளையெல்லாம் தாண்டி நாங்கள் 30 சதவீதத்துக்கும் மேலாக வெற்றி பெற்றுள்ளோம். தோல்வியடைந்தவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும், வெற்றி பெற்றவர்கள் தோற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதான் ஜெயலலிதாவின் அரசியல் பண்பாடு. திமுகவை யாரும் தொட்டுப்பார்க்கவும் முடியாது: அசைக்கவும் முடியாது என்றார்.

பரிதி இளம்வழுதி மற்றும் மாலை ராஜா ராஜினாமா பற்றி கேட்டபோது, அது கட்சியின் வேலை. கட்சி பார்த்துக்கொள்ளும் என்று பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா தினந்தோறும் மாவட்டச் செயலாளர், நகரச் செயலாளரை மாற்றுகிறாரே அதைப் பற்றி ஏன் நீங்கள் கேட்கவில்லை என்று யதார்த்தமாக பேசிவிட்டுச் சென்றார்.

Add Comment