ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபர் ஆக முடியுமா ? மக்கள் எதிர்ப்பு வலுக்கின்றது

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால், ஒபாமா மீண்டும் அதிபராவதற்கு, அமெரிக்க மக்களில் பாதிப் பேர் விரும்பவில்லை என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அமெரிக்காவில், Doxycycline No Prescription அடுத்தாண்டு நவம்பரில், அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக, அதிபர் பராக் ஒபாமா, கடந்த சில மாதங்களுக்கு முன்பே, பிரசாரத்தை துவக்கி விட்டார்.அதிபர் வேட்பாளராக, தான் நிற்பதற்கான நன்கொடை வசூலில், அவர் முழு மூச்சாக இறங்கியுள்ளார். இதற்காக, மாகாணங்கள் தோறும், பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், “கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்’ பத்திரிகை நடத்திய ஆய்வில், அமெரிக்கர்களில் பாதிப் பேர், அவர் மீண்டும் அதிபராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.தனிப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 35 சதவீதம் பேர் மட்டுமே, ஒபாமா மீண்டும் அதிபராவதற்குத் தகுதி உடையவர் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 56 சதவீதம் பேர், அவர் அதிபராக வரக் கூடாது எனக் கூறியுள்ளனர். 10 சதவீதம் பேர், கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரும், அமெரிக்க இந்தியருமான ராகவன் மயூர், இதுகுறித்துக் கூறுகையில், “தனிப்பட்ட நபர்களின் ஆதரவு தான் மிக முக்கியம். அவர்கள் தான் ஒருவர் மீண்டும் அதிபராக வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கின்றனர்’ என்றார்.வேலையில்லாத் திண்டாட்டம் குறையாதது, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாதது, விலைவாசி ஏற்றம், கல்விக் கட்டணம் ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அமெரிக்கர்கள், அதிபர் ஒபாமா மீதான நம்பிக்கையை, சிறிது சிறிதாக இழந்து வருகின்றனர் என, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Add Comment