குற்றாலம் மெயின் அருவி பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரம்

குற்றாலம் மெயின் அருவி பகுதியில் 13.65 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.குற்றாலத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த Buy Ampicillin ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. இதில் குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்கா 20 லட்சம் செலவிலும், ஐந்தருவி படகுகுழாம் 50 லட்சம் செலவிலும் உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.இதில் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்களின் நலன் கருதி குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் 13 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் குற்றாலம் மெயின் அருவியிலிருந்து வலது புறமாக கோயிலை நோக்கி பாலம் அமைக்கப்படுகிறது.

புதிய பாலம் குறித்து குற்றாலம் டவுன் பஞ்., துணைத் தலைவர் ராமையா கூறியதாவது:-“”குற்றாலத்திற்கு வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குற்றாலநாதசுவாமி கோயில், கடைவீதிகளுக்கு செல்வதற்கு அருவியை சுற்றியும், பஸ்ஸ்டாண்ட் பகுதியிலிருந்து மேற்கு நோக்கியும் வர வேண்டியுள்ளது. மேலும் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அருவிக்கு செல்லும் வழியில் உள்ள 2வது பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.இதனால் குற்றால அருவிகளில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் இந்த பாலத்தினை சுற்றுலா பயணிகள் பயன்படுத்திடும் வகையில் குற்றாலம் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் 13 லட்சத்து 65 ஆயிரம் செலவில் புதிய பாலம் கட்டப்படுகிறது. புதிய பாலத்தின் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Add Comment