அடவிநயினார் அணையில் ரூ.142 லட்சத்தில் புனரமைப்பு பணி : அமைச்சர் செந்தூர்பாண்டியன் தகவல்

அடவிநயினார் அணைக்கட்டில் 142 லட்ச ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். கடையநல்லூர் அருகேயுள்ள அடவிநயினார் மற்றும் கருப்பாநதி அணைக்கட்டில் இருந்து பிசான சாகுபடிக்காக நேற்று காலை

தண்ணீரை தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் திறந்து வைத்தார்.

132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணைக்கட்டில் 93 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு தற்போது 19 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக 45 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக வினாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ணைகளிலிருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் அடவிநயினார் மற்றும் கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரண்டு அணைகளிலிருந்து சாகுபடிக்காக 143 நாட்கள் Viagra No Prescription தண்ணீர் திறந்து விடப்படும். அடவிநயினார் அணைக்கட்டு பாசன விவசாயிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை அடுத்து முதல்வர் உத்தரவின்படி இந்த பணிகளுக்காக 142 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை பொறுத்தவரை சாலை வசதி, பூங்கா, அணை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிதி ஒதுக்கீட்டில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Add Comment