நெல்லை மாநகராட்சிக்கு புதிய வெப்சைட் துவக்கம்

நெல்லை: நெல்லை  மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளம் ஒன்று நேற்று துவக்கப்பட்டது. இதை மாநகராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கமிஷ்னர் சுப்பையன், செயற்பொறியாளர் நாராயணநாயர், உதவி கமிஷ்னர்கள் சாந்தி, சுல்தானா, சாமூவேல், செல்வராஜ், கவுன்சிலர்கள் துரை, அப்துல்கலாம், கோபி, பேபிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்த இணைய தளத்தின் முகவரி http:\\tirunelvelicorp.tn.gov.in

இதில் மாநகராட்சி குறித்த அனைத்து விபரங்கள், திட்ட செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் பணிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் குறித்த விபரங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.மாநகராட்சியின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை இணைய தளம்  மூலம் அறி்ந்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரி இனங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும், புகார்களையும் Buy cheap Amoxil கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment