திருப்பூரில் வெள்ளம் – நிவாரணப்பணியில் திருப்பூர் TNTJ, இதுவரை 3 லட்சததிற்கு மேல் நிவாரண உதவி

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதார அடிப்படை வசதிகூட இல்லாமல் அரசின் எவ்வித உதவியும் கிடைக்காமலும் கடும் பாதிப்புக்குள்ளார்கள்கள்.சத்யா நகர், சுகுமார் நகர் ,பெரியதோட்டம் ,அண்ணா நகர் ஆகிய பகுதிகள் மழை வெள்ளத்தால் சேறும் சகதியுமாக தேங்கி நின்றன.

மக்களின் கடும் பாதிப்பைக் கண்ட திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2 நாட்களும் எவ்வித அடிப்படை வசதியும் உணவும் இல்லாமல் தவித்த அந்த மக்களுக்கு உணவு, குடிநீர்,தேனீர் போன்றவைகளை வழங்கி சேவையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து ரூபாய் மூன்று லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வழங்கினார்கள். அதுமட்டுமின்றி பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள்.


ஆளும் அரசாங்கத்தின் உதவியே உடனடியாகக் கிடைக்காத போது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்கள் செய்த பணி அங்கிருந்த மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.அங்கிருந்த மக்கள் நம் சகோதரர்களிடம் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்


அம்மக்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். அல்குர்ஆன் 98:7

081120111060081120111061
081120111061081120111059

081120111064081120111068081120111062

நிவாரண பணிகள் குறித்த கலத் தொகுப்பு பின்னர் வெளியிடப்படும். இன்ஷா buy Cialis online அல்லாஹ்

Add Comment