நெல்லையில் அல்வா விலை “திடீர்” உயர்வு

Buy Viagra src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/11/iruddukadai-2-300×225.jpg” alt=”” width=”300″ height=”225″ />

அல்வா என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது நெல்லை தான். பல ஊர்களில் பல வகைகளில் அல்வா விற்றாலும் நெல்லை அல்வாவின் சுவை தனிதான். ஆகையால் நெல்லை அல்வாவுக்கு தனி மவுசு உள்ளது. நெல்லையை பொறுத்தவரை டவுண் நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள இருட்டுகடை அல்வா பிரபலமானது.
மாலை 6 மணிக்கு பிறகே திறக்கப்படும் இந்த கடையில் சில மணி நேரத்திலேயே அல்வா விற்பனையாகிவிடும். நெல்லையை பொறுத்தவரை அனைத்து ஸ்வீட் கடைகளிலும் அல்வா விற்கப்படுகிறது. இதனால் அந்த கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் காணப்படும். நெல்லையில் ஸ்வீட்களின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது அல்வாவின் விலையும் உயர்ந்துள்ளது. நெல்லை டவுண் இருட்டுக்கடையில் ஒரு கிலோ அல்வா ரூ.120-க்கு விற்கப்பட்டது. அது தற்போது ரூ.140-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஸ்வீட் கடைகளில் கிலோ 100 ரூபாய்க்கு அல்வா விற்கப்பட்டது. தற்போது அந்த கடைகளில் அல்வா விலை ரூ.120- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Add Comment