இந்த ஆண்டு மட்டும் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

buy Levitra online alt=”” width=”156″ height=”222″ />

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள், குழந்தைகள் தினமாக பள்ளி கல்வி துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

சென்னை சாந்தோம் மேனிலை பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், பள்ளி கல்வி துறை கூடுதல் செயலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி கல்வி துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார்.

’’தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார். இந்திய அளவில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக இலவச திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

கல்விக்காக கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.13,313 கோடி ஒதுக்கியுள்ளோம்.

பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வு கூடங்கள், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க ரூ.1,890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இந்த ஆண்டு மட்டும் 55,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 2006&2011 ஆண்டுகளில் 58,000 ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டனர். ஆனால் 2001&2006 ஆண்டுகளில் 61000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இப்போது ஒரே ஆண்டில் 55000 ஆசிரியர் நியமிக்க உள்ளோம்.

பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி திட்டம் தமிழகத்தில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது’’என்று பேசினார்.

Add Comment