கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழு இன்று ஆய்வு

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரையோர கிராம மக்கள் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

 

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நிபுணர் குழுக்களை அமைத்து இருக்கின்றன. இந்த குழுக்கள் கடந்த 8ந் தேதி நெல்லையில் கூடி ஆலோசனை நடத்தின. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையிலான Buy Levitra Online No Prescription மத்திய குழுவினர் பின்னர் கூடங்குளம் சென்று அணு உலையை ஆய்வு செய்தனர்.

மத்திய குழுவினர் மீண்டும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்கிறார்கள். அவர்கள், வருகிற 17 ந் தேதி வரை, அதாவது 3 நாட்கள் ஆய்வு செய்கிறார்கள். போராட்ட குழுவினர் கேட்ட 50 கேள்விகளுக்கு விஞ்ஞானிகளிடம் அப்போது மத்திய குழுவினர் பதில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையிலான மத்தியக்குழுவில் சென்னை அடையார் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் சாந்தா, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கதிர்வீச்சு பாதுகாப்பு பிரிவு முன்னாள் இயக்குனர் அய்யர், டாடா நினைவு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இணை பேராசிரியர் சி.எஸ்.ரமேஷ், மங்களூர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் மத்தியஸ்தா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வாழ்க்கை அறிவியல் பள்ளி இயக்குனர் சுகுமாரன், மும்பை மீன்வள கல்வி மையத்தின் பேராசிரியர் ஏ.கே.பய், மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கண்ணன் அய்யர், பாபா அணு ஆராய்ச்சி மைய அணு உலை பிரிவின் முன்னாள் இயக்குனர் எஸ்.கே.மேத்தா, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் சர்மா, பாபா அணு ஆராய்ச்சி மைய அணுக்கழிவு மேலாண்மை பிரிவு முன்னாள் இயக்குனர் பாலு, கல்பாக்கம் பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவு அதிகாரி எஸ்.எம்.லீ, கன நீர்வாரிய முன்னாள் இயக்குனர் ஸ்டீபன் அருள்தாஸ் கந்தையா, ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஹர்ஸ் கே.குப்தா, சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் மூர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Add Comment