நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

மார்த்தாண்டம் : கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரை அமைக்கப்படும் புதிய நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 560 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரை புதிய 4 வழிச்சாலைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. குமரி Lasix online மாவட்டத்தில் இந்த சாலை காரோடு,  இறச்சகுளம், புத்தேரி, அப்டா மார்க்கெட், வழக்கம்பாறை வழியாக கன்னியாகுமரி செல்கிறது.

இந்த இடங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. பணி முடிந்த இடங்களில் எல்லை கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாலை அமைவதால் குமரிமாவட்டத்தில் 99 குளங்கள், 2500க்கும் மேற்பட்ட வீடுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதா ரங்கள், ஏராளமான மதவழிபாட்டு தலங்கள், 3 ஆயிரம் ஹெக்டேருக் கும் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். இந்த சாலை அமைக்க ஸீ2ஆயிரம் கோடிக்கு மேல் செலவாகும்.

இந்த சாலை அமைப்பதால் குமரியில் உள்ள இயற்கை வழங்கள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் இந்த திட்டத்திற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கைவிட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையையே 4 வழிச்சாலையாக மாற்ற வலியுறுத்தி என்.எச்.47 வளர்ச்சி பாதுகாப்பு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்ட குழு சார்பில் நேற்று காலை காந்தி மைதானத்தில் மறியல் போராட்டம் நடந்தது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு குவிந்ததால் மார்த்தாண்டம் பஸ்நிலையத்திற்கு பஸ்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் போலீசாரை மீறி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து 286 பெண்கள் உட்பட 560 பேரை போலீசார் கைது செய்தனர்.

Add Comment