தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி

தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது என முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் இது அரசு பஸ்களுக்கு மட்டும் தானே என எண்ணிய தனியார் பஸ் உரிமையாளர்கள் Buy Levitra Online No Prescription “சைலண்டாக’ பஸ் கட்டணத்தை திடீரென உயர்த்தியுள்ளனர்.இதுவரை குறைந்தபட்ச கட்டணமாக 3 ரூபாய் வசூல் செய்யப்பட்டது 4 ரூபாயாக வசூல் செய்யப்படுகிறது.

டவுன் பஸ்களில் ஒரு ரூபாய் வரையும், ரூட் பஸ்களில் குறைந்தது இரண்டு ரூபாயும் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர்.தென்காசி-ஆலங்குளத்திற்கு தனியார் பஸ்களில் 8 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்று (2ம் தேதி) முதல் தென்காசி-ஆலங்குளத்திற்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் பஸ் கண்டக்டர்கள் நேற்றே பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் கூறியுள்ளனர். இதனால் பயணிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஏற்கனவே அரசு பஸ்களில் எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., என்பன போன்ற பெயர்களை வைத்து கட்டணம் அதிரிக்கப்பட்டுள்ளது. தாழ்தள பஸ்களிலோ குறைந்த கட்டணமாக 7 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, கார், வேன் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. மேலும் லாரி வாடகைகள் கூடுவதால் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து உள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ் கட்டணம் உயராது என முதல்வர் அறிவித்துள்ளதை தனியார் பஸ் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Add Comment