ஆசியாவில் டேரா போட அமெரிக்கா திட்டம்

அமெரிக்க படைகள் தொடர்ந்து ஆசிய பசிபிக் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள ஒபாமா, அங்கு பார்லிமென்ட் Amoxil No Prescription சிறப்பு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, அமெரிக்கா பசிபிக் பகுதிகளில் பலம் வாய்ந்த நாடாக உள்ளது. ஆசிய பசிபிக் பகுதிகளில் அமெரிக்க படைகளின் இருப்பும், செயல்பாடும் தமது நாட்டின் முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். நேற்று ஆஸி., பிரதமர் ஜூலியா கில்லார்டை சந்தித்த ஒபாமா, அவருடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்படி, ஆஸி.,யின் டார்வின் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 2500 வீரர்கள், 250 போர்க்கப்பல்களில் 6 மாதங்களுக்கு முகாமிட்டிருப்பார்கள். இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து அமெரிக்க படைகள் இருக்கும் என்ற அறிவிப்பு, சீனாவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.

Add Comment