பால் லிட்டருக்கு ரூ 6.25 உயர்வு,பேருந்து கட்டணம் உயர்வு:ஜெயலலிதா

முதல் அமைச்சர் ஜெயலலிதா 17.11.2011 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின், தனியார் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு Buy Amoxil வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் ஏற்கெனவே பெருத்த நட்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு; அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து 24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 42 பைசா என்றும்; விரைவு, மற்றும் செமி டீலக்ஸ் புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 32 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 56 பைசா என்றும்; சூப்பர் டீலக்ஸ் மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 38 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 60 பைசா என்றும்;  அல்ட்ரா டீலக்ஸ்  புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 52 பைசா வீதம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை 70 பைசா என்றும் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று, நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், சென்னை நீங்கலாக, இதர பகுதிகளில் தற்போதுள்ள குறைந்த பட்ச கட்டணம் 2 ரூபாயிலிருந்து  3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும்; சென்னை நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணம்  2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாகவும்; அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயிலிருந்து  14 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Add Comment