கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி:25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு

கடையநல்லூரில் நேற்று மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலியானார். மேலும் பேட்டை பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலங்காரம் மகள் நாககோமதி (3). இந்த சிறுமி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் buy Viagra online நேற்று மர்ம காய்ச்சலால் சிறுமி பலியானார். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவுதான் சிறுமியின் பலிக்கு காரணம் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடையநல்லூர் பேட்டை நத்தகர் பள்ளிவாசல் பகுதிகளில் 25க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவியதாகவும், இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு பூச்சியியல் நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டதையடுத்து கடையநல்லூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Comment