அரையிறுதிக்கு முன்னேறுமா பிரேசில்: இன்று நெதர்லாந்துடன் பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய முதல் காலிறுதிப் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, நெதர்லாந்து அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது. இதில் பிரேசில் அணி வெற்றி பெறும் பட்சத்தில், 11வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறலாம்.
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் 19வது “பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. போர்ட் எலிசபெத் நகரில் இன்று நடக்கும் முதல் காலிறுதியில், “பிபா’ உலக தரவரிசை (ரேங்கிங்) பட்டியலில் “நம்பர்-1′ இடத்தில் உள்ள பிரேசில் அணி, நெதர்லாந்து (“நம்பர்-4′) அணியை எதிர்கொள்கிறது.
பேபியானோ நம்பிக்கை:
லீக் சுற்றில் அசத்திய பிரேசில் அணி, “ரவுண்ட்-16′ போட்டியில் சிலியை வீழ்த்தி, 14வது முறையாக காலிறுதிக்கு தகுதிபெற்றது. தொடர்ந்து அபாரமாக ஆடி வரும் லூயிஸ் பேபியானோ, இலானோ, மைகான், ரொபினியோ, ஜுயன், கில்பெர்டோ சில்வா, கேப்டன் லூசியோ உள்ளிட்ட வீரர்கள், நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய காலிறுதியில் சாதிக்கும் பட்சத்தில், சுலபமாக அரையிறுதிக்கு முன்னேறலாம். இதுவரை ஒரு கோல் கூட அடிக்காத நட்சத்திர வீரர் காகா எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தவிர பயிற்சியாளர் துங்காவின் அனுபவம் இன்றைய போட்டியில் நிச்சயம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பயிற்சியாளர் துங்கா கூறுகையில், “”நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய காலிறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். இப்போட்டி பைனல் போன்று இருக்கும் என எதிர்பார்க்கிறேன். வீரர்கள் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சுலப வெற்றி பெற முடியும்,” என்றார்.
கைகொடுப்பாரா ஸ்னைடர்:
லீக் சுற்றில் “ஹாட்ரிக்’ வெற்றி கண்ட நெதர்லாந்து அணி, சுலோவேகியா அணிக்கு எதிரான “ரவுண்ட்-16′ போட்டியில் வெற்றி பெற்று, 5வது முறையாக உலக கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. கடந்த போட்டிகளில் கலக்கிய ஸ்னைடர், ராபின் வான் பெர்சி, கிளாஸ் ஜான் ஹன்டிலார், டெர்க் குயிட், அர்ஜென் ராபென் உள்ளிட்டோர், பிரேசில் அணிக்கு எதிரான இன்றைய காலிறுதியில் கைகொடுக்கும் பட்சத்தில், 4வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதிபெறலாம்.
இதுகுறித்து நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் பெர்ட் வான் மார்விச் கூறுகையில், “”பிரேசில் அணிக்கு எதிரான இன்றைய காலிறுதிப் போட்டியை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். எங்கள் தற்காப்பு பகுதி வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருப்பது சாதகமான விஷயம். ஒருவேளை போட்டியின் முடிவு “பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு செல்லும் பட்சத்தில், பிரேசில் அணிக்கு எதிராக சாதிக்க தேவையான பயிற்சி மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.
பிரேசில் ஆதிக்கம்:
சர்வதேச கால்பந்து அரங்கில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் 9 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 3, நெதர்லாந்து 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. நான்கு போட்டிகள் “டிரா’வில் முடிந்துள்ளன. உலக கோப்பை கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் 4 போட்டியில் மோதியுள்ளன. இதில் பிரேசில் 2, நெதர்லாந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி “டிரா’ ஆனது.

உருகுவே அணியை சமாளிக்குமா கானா

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் மற்றொரு காலிறுதிப் போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்ரிக்காவில், உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இன்று ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள “சாக்கர் சிட்டி’ மைதானத்தில் நடக்கும் 2வது காலிறுதிப் போட்டியில், உலக தரவரிசை பட்டியலில் 16வது இடத்தில் உள்ள உருகுவே, கானா (32வது இடம்) அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
சோரஸ் நம்பிக்கை:
கடந்த 1930ல் முதல் உலக கோப்பையை வென்ற பெருமைமிக்க உருகுவே அணி, “ரவுண்ட்-16′ சுற்றில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 6வது முறையாக உலக கோப்பை காலிறுதிக்கு தகுதிபெற்றது. கடந்த போட்டிகளில் கைகொடுத்த கேப்டன் டியாகோ லுகானோ, முன் கள வீரர்கள் டியாகோ போர்லான், லூயிஸ் சோரஸ், மார்டின் கேசரஸ், அல்வரோ பெரேய்ரா <உள்ளிட்டோர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் சாதிக்கும் பட்சத்தில், 5வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இதுகுறித்து உருகுவே அணியின் டியாகோ போர்லான் கூறுகையில், “”சுமார் 40 ஆண்டுகளுக்கு பின், உலக கோப்பை காலிறுதிக்கு உருகுவே அணி முன்னேறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கானா அணிக்கு எதிரான இன்றைய காலிறுதிப் போட்டிக்கு முழுவீச்சில் தயாராகி உள்ளோம். எங்கள் பயிற்சியாளர் ஆஸ்கர் டபாரசின் ஆலோசனையின்படி போட்டியில் சிறப்பான Buy cheap Cialis ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரையிறுதிக்கு முன்னேற போராடுவோம்,” என்றார்.
கானா எதிர்பார்ப்பு:
தென் ஆப்ரிக்கா, காமரூன் உள்ளிட்ட ஆப்ரிக்க அணிகள் வெளியேறிய நிலையில், ஆப்ரிக்கா சார்பில் கானா அணி மட்டும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் கானா அணியினர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், பலமான உருகுவே அணியை வீழ்த்தி, முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெறலாம்.
இதுவரை 2 உலக கோப்பை தொடரில் (2006, 10) விளையாடிய கானா அணி, கடந்த முறை “ரவுண்ட்-16′ சுற்றோடு வெளியேறியது. இம்முறை காலிறுதிக்கு முன்னேறியிருப்பது, அந்த அணியின் எழுச்சியை வெளிப்படுத்துகிறது. இத்தொடரில் அபாரமாக செயல்பட்ட அசமாவ் கியான், அந்தோணி அன்னான், ஸ்டீபன் அப்பையா, பிரின்ஸ் டாகோ உள்ளிட்டோர் இன்றும் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து அணியின் இளம் வீரர் கியான் (24 வயது) கூறுகையில், “”உருகுவே அணிக்கு எதிரான இன்றைய போட்டி சவால் நிறைந்ததாக இருக்கும். ஏனெனில் கால்பந்து அரங்கில் உருகுவே அணி நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் நாங்கள் முழுதிறமையை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற போராடுவோம். எந்த ஒரு அணியுடனும் விளையாட நாங்கள் தயாராக உள்ளோம்,” என்றார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் முதன் முறையாக சந்திக்கின்றன.

Add Comment