விம்பிள்டன் டென்னிஸ்: பைனலில் செரினா-சுவனரேவா மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் சுவனரேவா மோதுகின்றனர்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக்குடியரசின் பெட்ரா கெவிடோவாவை சந்தித்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, 6வது முறையாக விம்பிள்டன் பைனலுக்கு முன்னேறினார்.
சுவனரேவா அபாரம்:
மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் சுவனரேவா, பல்கேரியாவின் பிரான்கோவாவை சந்தித்தார். இதன் முதல் செட்டை பிரான்கோவா, 6-3 என கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட சுவனரேவா, 2வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி Buy Amoxil Online No Prescription கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அசத்திய சுவனரேவா 6-2 என கைப்பற்றினார். இறுதியில் சுவனரேவா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார். தவிர, 2வது முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக கடந்த 2006ல் நடந்த யு.எஸ்., ஓபன் பைனலுக்கு முன்னேறிய இவர், தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.
பயஸ் ஜோடி முன்னேற்றம்:
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பால் ஹென்லி, சீன தைபேயின் யங்-ஜன் சன் ஜோடியை சந்தித்தது. இதில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய பயஸ் ஜோடி, “டை-பிரேக்கர்’ வரை நீடித்த 2வது செட்டை 6-7 என பரிதாபமாக இழந்தது. பின்னர் எழுச்சி கண்ட பயஸ் ஜோடி 3வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தியது. இறுதியில் பயஸ்-காரா பிளாக் ஜோடி 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் முர்ரே:
நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பிரான்சின் ஜோ-வில்பிரிட் டோங்காவை எதிர்கொண்டார்.
“டை-பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை டோங்கா, 7-6 என கைப்பற்றினார். <<பின்னர் எழுச்சி கண்ட முர்ரே, 2வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய முர்ரே, அடுத்த இரண்ட செட்டை 6-2, 6-2 என மிகச் சுலபமாக கைப்பற்றினார். இறுதியில் முர்ரே 6-7, 7-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

Add Comment