விஸ்வரூபம் எடுத்த பஸ் கட்டண உயர்வு : கதிகலங்கிய மக்கள்?

சென்னை: பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வுக்கு தமிழகம் முழுவதும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். நள்ளிரவு முதல் பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததால் இன்று காலை எல்லா இடங்களிலும் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் திவா லாகும் நிலையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக பஸ் மற்றும் மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக அறிவித்தார்.

மத்திய அரச எந்த உதவியும் செய்யவில்லையாம்!

மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். பஸ் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவிலேயே அமலுக்கு வந்துவிட்டது. உயர்த்தப்பட்ட பால் விலை பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என ஆவின் அதிகாரி ஒருவர் கூறினார். மின் கட்டண உயர்வு எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் கோரிக்கை வைக்கும். அதனடிப்படையில் ஒழுங்குமுறை ஆணையம், மக்களிடம் கருத்து கேட்டு கட்டண உயர்வை அறிவிக்கும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கடுமையாக உயர்ந்த பஸ் கட்டணம்-?

பஸ் கட்டணம், இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக நகர பஸ்களில் ரூ.1 முதல் ரூ.2 வரை கட்டணம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது ஒரேயடியாக ரூ.5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சாதாரண புறநகர் பஸ்களில் கிலோ மீட்டருக்கு 28 பைசா வசூலிக்கப்பட்டது. இன்று முதல் 42 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு 14 காசு உயர்த்தப்பட்டது. விரைவு பஸ்களில் 32 காசுகளில் இருந்து 56 காசாகவும்,  சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் 38 காசுகளில் இருந்து  60 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் 52 காசுகளில் இருந்து 70 காசாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2ல் இருந்து 3 ஆக உயர்த்தப்பட்டது.

கேள்விக்குறியாகிப் போன பேருந்துப் பயணம்?

சென்னையில் மாநகர பஸ்களை பொருத்தவரை சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2-ல் இருந்து ரூ.3 ஆகவும், எம் சர்வீஸ் பஸ்களில் ரூ.3-ல் இருந்து ரூ.4 ஆகவும், எல்எஸ்எஸ் பஸ்களில் ரூ.2.50-ல் இருந்து ரூ.3.50 ஆகவும், விரைவு பஸ்களில் ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆகவும், சொகுசு பஸ்களில் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும், ஏ.சி. பஸ்சில் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்ந்துள்ளது. எல்லா பஸ்களிலும் அதிகபட்ச கட்டணம் ரூ.5 வரை அதிகரித்துள்ளது.
விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு Viagra No Prescription இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

கண்டனம் தெரிவித்த கட்சிகள்…

பஸ் கட்டண உயர்வுக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றன. முதல்வர் அறிவித்தகட்டண உயர்வு குறித்த செய்தி, நேற்றிரவுதான் டிவி செய்திகள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலான மக்களுக்கு கட்டண உயர்வு குறித்து தெரியவில்லை. அவர்கள் இன்று காலை பஸ்களில் பயணம் செய்தபோது புதிய கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். கண்டக்டர்களுக்கும் புதிய கட்டண விவரம் தெரியவில்லை. அவர்களுக்கு அந்தந்த டெப்போக்களில் கட்டண விவரம் குறித்த துண்டு சீட்டு வழங்கப்பட்டது. அதை பார்த்தே டிக்கெட் கொடுக்கின்றனர். இதனால் தாமதம் ஏற்பட்டது.

Add Comment