நர்சிங் படித்த மாணவிகளுக்கு உடனடியாக வேலை

தமிழ்நாட்டில் புதிது புதிதாக மருத்துவக் கல்லூரிகள் Buy Amoxil வருடந்தோறும் வந்து கொண்டிருப்பதால் நர்சிங் படித்த மாணவிகளுக்கு உடனடியாக வேலை கிடைத்துவிடுகிறது. படிக்க படிக்க அவர்கள் பணிகளில் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது அரசு ஆஸ்பத்திரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு வருடந்தோறும் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. இவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் கவுன்சிலிங் நடத்தி மார்க் மற்றும் இன அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் எம்.பி.பி.எஸ். கவுன்சிலிங் முடிந்தபின்பு பி.எஸ்சி. நர்சிங் கவுன்சிலிங் நடைபெறும். செப்டம்பர் மாத வாக்கில் டிப்ளமோ நர்சிங் படிக்க விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
நர்சிங் படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்று நேற்று சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜிடம் கேட்டதற்கு, நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வேலை வழங்குகிறோம். இந்த வருடம் ஆயிரம் நர்சுகள் பணிநியமிக்கப்பட உள்ளனர். வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவ கவுன்சில் வாய்ப்பு அளித்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான 160 இடங்களை 250 இடங்களாக அதிகரிக்க போதிய படுக்கைகள் மற்றும் கட்டிட வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதுபோல கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் உள்ள 100 இடங்களை 150 இடங்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு எழுத உள்ளோம்.
அடுத்த வருடம் இந்த இடங்கள் வர வாய்ப்பு உள்ளது. அதேபோல விழுப்புரம் மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரிகள் இந்த வருடம் தொடங்க வாய்ப்பு உள்ளது. ஆய்வுகள் முடிந்துவிட்டன. எனவே தமிழ்நாட்டில் வருடந்தோறும் மருத்துவம் படிக்க இடங்கள் அதிகரித்துவருகிறது. இவ்வாறு வி.கே.சுப்புராஜ் தெரிவித்தார்.

Add Comment