அதிகரிக்கும் விவாகரத்துக்கள் – சமூக அமைப்பின் சீர்கேட்டின் அறிகுறி

அண்மையில் சவுதியில் வந்த ஒரு ந்யூஸ். சில பெண்கள் தங்கள் தந்தைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடுப்பது அதிகரித்து வருகிறது. 10 – 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அதே நேரம் 38 – 44 வயது பெண்கள் திருமணம் ஆகாமல் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 1450 ஆண்டுகளுக்கு முன்பு பெண் பிள்ளைகளை கொலை செய்யும் பழக்கம் இருந்தது. இன்று பெண்களை உயிரோடு கொல்லும் பழக்கம் உருவாகி விட்டது. பெண்களின் உரிமைகளை பாதுகாக்கும் இஸ்லாத்தின் பெயரால் இந்த அநியாயம் நடந்து கொண்டு இருக்கிறது. தவறான புரிந்து கொள்ளும் தன்மையால் இன்று ஒரு சமூக சீர் கேட்டிற்கு காரணமாக சட்டம் உள்ளதோ என்ற எண்ணத்தை தோற்று விக்கப் படுகிறது. இந்த ஆங்கில செய்தியை க்ளிக்கிப் படிக்கவும்.

அண்மையில் குவைத் நாட்டுப் பத்திரிக்கை செய்தியின் படி ஒரு நாளைக்கு குவைத்தில் 30 திருமணங்கள் நடக்கின்றன. 10 விவாகரத்துக்கும் விண்ணப்பம் செய்யப் படுகின்றன. 1990 – 2000 ஆண்டுகளை விட 15% இது அதிகம் என்கின்றனர். மொத்தம் குவைத் நாட்டு ஜனத் தொகை 3.3 மில்லியன். இதில் குவைத் நாட்டைச் சேர்ந்தவர்கள் 11 லட்சம். ஆண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என்று மைனஸ் செய்தால் 3 லட்சம் பெண்கள் இருப்பார்கள். இதில் 90000 பெண்கள் தலாக் செய்யப் பட்டவர்கள். இதற்கு முக்கிய காரணம் அடிப்படை இஸ்லாமிய கோட்பாடுகளை மறந்து வாழும் நிலை. அநேகப் பெண்கள் மாதம் 700 – 1000 தினார்கள் சம்பளம் வாங்கும் அரசாங்க வேலையில் இருக்கின்றார்கள். வாழ்க்கை நடத்த இன்று பொருளாதாரம் இருந்தால் போதும். ஏனையவற்றை இந்த பொருளாதாரம் பெற்றுத் தரும் என்ற தவறான எண்ணம் தான் இந்த தலாக் அதிகமாவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. சில தினங்களுக்கு முன் குவைத் போலிஸ் நிலையத்தில் இந்த ஊர் காரர் ஒரு புகார் கொடுத்தார். அவர் வீட்டில் buy Ampicillin online வேலை செய்யும் டிரைவர் (தமிழகத்தைச் சேர்ந்தவர்) அவருடைய மகள் ரூமிலிருந்து வெளியே வரும் போது பார்த்தாராம். அதனால் டிரைவர் மீது திருட்டு குற்றம் சுமத்தி, காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். சராசரியாக மாதம் இரண்டு குழந்தைகள் ரோட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப் படுகின்றன.

நம் ஊர் கதைக்கு வருவோம்
கோவை வக்கீல்களின் சங்கம், கோவை நீதிமன்றத்திற்கு வரும் விவாகரத்து வழக்குகள் அதிகமாகி விட்டதால், தனியாக கெளன்ஸிலிங் க்ரூப் அமைத்து, விவாகரத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த க்ரூப் அலுவலகத்திற்கு சென்று அவர்களின் நிலையை கூற வேண்டும். பாதி கேஸ்கள் கோர்ட்டுக்குச் செல்லாமல் இங்கிருந்தே சரி செய்து அனுப்பப் படுகின்றன. பெங்களூரில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை செய்த பெண்மணி கோவை கோர்ட்டுக்கு விவாஹரத்து பண்ண வந்துள்ளார். அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? என் தற்போதைய கணவரை விட, வயதில் குறைவான, திறமையான நபர் என்னுடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவரைத் திருமணம் செய்து கொள்ள இவரை விவாஹரத்து செய்கின்றேன் என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்து, அல்லாஹ் கூறியுள்ள வாழ்க்கை முறையில் வாழா விட்டால், நபிகள் காட்டிய வழியில் நாம் இதை செய்யாமல், மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின் பற்றினால், அதன் விளைவு சமூக சீர் கேடுதான் என்பதை இத்தகைய செய்திகள் பறைசாற்றுகின்றன.

Add Comment