இந்திய தொடர்: நியூசி அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வில்லியம்சன், பென்னட் ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பரில் துவங்குகிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் நவ., 4ல் துவங்கும். அடுத்து ஐதராபாத் (நவ., 12-16), நாக்பூரில் (நவ., 20-24) இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் நடக்கிறது.
இதற்கான 15 பேர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் சதம் அடித்த வில்லியம்சன் இடம் பெற்றுள்ளார். தவிர, ஹாமிஸ் பென்னட் (23) என்ற இளம் வேகப்பந்து வீச்சாளருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. தவிர, கேப்டன் வெட்டோரி Buy cheap Bactrim தலைமையிலான இந்த அணியில் பிரண்டன் மெக்கல்லம். மெக்கின்டோஸ், ரைடர், கப்டில், டெய்லர் மற்றும் டிம் சவுத்தி உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் மார்க் கிரேட்பாட்ச் கூறுகையில்,”” வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-4 என இழந்ததை, ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டுள்ளோம். மிகவும் கடினமான இந்திய அணிக்கு எதிராக போராட, சிறப்பாக தயாராகி வருகிறோம். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் மற்றும் பென்னட்டை தேர்வு செய்துள்ளோம். தவிர, மற்ற வீரர்களும் இந்தியாவுக்கு எதிராக <உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம்,” என்றார்.
டெஸ்ட் தொடர் முடிந்த பிறது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், வரும் நவ., 28ல் துவங்குகிறது. இதற்கான அணி பின்னர் அறிவிக்கப்படும்.

15 வீரர்கள் அடங்கிய அணி:
வெட்டோரி (கேப்டன்), பிரன்ட் அர்னல், ஹாமிஸ் பென்னட், கப்டில், ஹாப்கின்ஸ், கிறிஸ் மார்டின், பிரண்டன் மெக்கலம், மெக்கின்டோஸ், ஆன்டி மெக்கே, ஜிடன் படேல், ரைடர், ரோஸ் டெய்லர், டிம் சவுத்தி, வாட்லிங், வில்லியம்சன்.

Add Comment