சூதாட்ட பெண்ணுடன் ரெய்னா தொடர்பு * ஐ.சி.சி., விசாரணையால் பரபரப்பு

இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை தொடரின் போது, சூதாட்ட ஏஜன்ட்டுக்கு நெருக்கமான பெண்ணுடன் சுரேஷ் ரெய்னா காணப்பட்டுள்ளார். இது பற்றி ஐ.சி.சி., ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருவதாக, பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணி கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இலங்கை சென்று, டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. பாகிஸ்தானில் இலங்கை அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இத்தொடரின் போது உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் ரகசிய “சிசிடிவி’ கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்பு அம்பலம்:
இந்த “கேமரா’வில் சுரேஷ் ரெய்னா, சூதாட்ட ஏஜன்ட் ஒருவருக்கு நெருக்கமான பெண்ணை, இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இது குறித்த செய்தியை லண்டனில் இருந்து வெளியாகும் “தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
ஐ.பி.எல்., தொடரில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. பின் லார்ட்ஸ் டெஸ்டில் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிர் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் “ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டனர். இந்தச் சூழலில் இலங்கை தொடரில் இந்திய வீரர் ரெய்னா, சூதாட்ட பெண்ணுடன் காணப்பட்டுள்ளார். இதற்கான “வீடியோ’ ஆதாரத்தை பி.சி.சி.ஐ.,யிடம் இலங்கை கிரிக்கெட் போர்டு வழங்கியுள்ளது. ஆனால், பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இப்புகாரை திரும்பப் பெறும்படி இலங்கை கிரிக்கெட் போர்டை வலியுறுத்தியுள்ளார். சீனிவாசன் உரிமையாளராக இருக்கும் ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் ரெய்னா விளையாடி வருகிறார்.
இப்பிரச்னையில் ரெய்னா தவறு செய்ததாக சந்தேகம் எழவில்லை. ஆனாலும், அவரை காப்பாற்றும் முயற்சிகள் நடந்துள்ளன. முறைப்படி விசாரணை நடத்தாமல், இச்சம்பவத்தை மூடி மறைக்கும் முயற்சியில் சீனிவாசன் ஈடுபட்டுள்ளார். Buy Cialis இது குறித்து ஐ.சி.சி., விசாரணை நடத்தி வருகிறது.
தவிர, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் விதிமுறைப்படி, சூதாட்டம் தொடர்பான தகவலை முதலில் ஐ.சி.சி.,க்கு தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், இலங்கை கிரிக்கெட் போர்டு, தகவலை பி.சி.சி.ஐ.,க்கு முதலில் அளித்துள்ளது. இது பற்றி ரவி சவானி தலைமையிலான ஐ.சி.சி., ஊழல் தடுப்பு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் நிஷாந்தா ரணதுங்கா கூறுகையில்,””ரெய்னா பற்றிய செய்தி புதிதாக இருக்கிறது. இதில் உண்மை எதுவும் இல்லை,”என்றார்.
இப்பிரச்னை பற்றி ஐ.சி.சி., செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,””எந்த ஒரு ஐ.சி.சி., விசாரணை குறித்தும் கருத்து தெரிவிக்க முடியாது,”என்றார்.
கடந்த 2000ல் அசார் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கினர். தற்போது ரெய்னாவும் சர்ச்சையில் சிக்கியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பி.சி.சி.ஐ., மறுப்பு
சூதாட்ட புகாரை மறுத்த பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,””ரெய்னா பற்றி இலங்கை கிரிக்கெட் போர்டு(எஸ்.எல்.சி.,) அளித்த புகார் மீது பி.சி.சி.ஐ., எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என “மீடியா’வில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஆதாரமற்ற பொய்யான செய்தி. எஸ்.எல்.சி.யிடம் இருந்து எங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை. இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடும் ரெய்னாவை வீணாக குறி வைக்கின்றனர்,”என்றார்.

யார் அந்த மர்ம பெண்
ரெய்னாவுடன் காணப்பட்டது “சூதாட்ட’ பெண் இல்லையாம். இது குறித்து பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,””ரெய்னா மீது பொய்யான ஆதாரமற்ற புகார் கூறப்படுகிறது. ஐ.சி.சி., அல்லது இலங்கை கிரிக்கெட் போர்டிடம் இருந்து எவ்வித புகாரும் பி.சி.சி.ஐ.,க்கு வரவில்லை. சந்தேகிக்கப்படும் அந்த பெண், உண்மையில் ரெய்னாவின் ஏஜன்ட். அவரது விளம்பர ஒப்பந்தம் தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். சில இலங்கை வீரர்களுக்கும் ஏஜன்ட்டாக உள்ளார். ஒப்பந்தங்களில் முறைப்படி கையெழுத்திடத் தான் அவரை, ரெய்னா சந்தித்துள்ளார். இதில், சூதாட்டம் மற்றும் ஊழல் நடக்கவில்லை. தவிர, கிரிக்கெட்டுக்கு அப்பாற்பட்ட விஷயமும் பேசப்படவில்லை. “மீடியா’வில் ஊகத்தின் அடிப்படையில் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது,”என்றார்.

Add Comment