கடையநல்லூரில் கல்லூரி மாணவி மாயம்

கடையநல்லூரில் மாணவி கடத்தப்பட்டதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து Ampicillin online வருகின்றனர். கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மகள் சௌராபர்வீன் (21). வள்ளியூரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறாராம்.  இதே கல்லூரியில் படித்து வருபவர் ராதாபுரம் துரைகுடியிருப்பைச் சேர்ந்த கனகராஜ் ஜோசப் மகன் செபஸ்டியன் நிஷாந்த் (21). இவர் சௌராபர்வீனை காதலித்ததாக கூறப்படுகிறது. இது தெரிந்த சௌராபர்வீனின் தந்தை காஜாமைதீன், தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாராம். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் மதுரை நீதிமன்றத்தில் தனது காதலியை காணவில்லை எனவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் செபஸ்டியன் நிஷாந்த் மனு தாக்கல் செய்தாராம்.  இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடையநல்லூர் போலீஸôர் சௌராபர்வீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினராம். இதையடுத்து, சௌராபர்வீன் தனது பெற்றோருடன் சேர்ந்து இருப்பதாக கூறினாராம். இந்நிலையில், கடையநல்லூரில் தனது பெற்றோருடன் இருந்த சௌராபர்வீனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தனது மகள் கடத்தி செல்லப்பட்டதாக கடையநல்லூர் போலீஸில் காஜாமைதீன் சனிக்கிழமை இரவு புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Add Comment