பால், பேருந்து, மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம்

Doxycycline No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2011/11/iuml-11-300×2251.jpg” alt=”” width=”300″ height=”225″ />

பால், பேருந்து, மின் கட்டண உயர்வை கண்டித்து வடசென்னை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தலைமை தாங்கி பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேசியதாவது-

தமிழக அரசு அறிவித் துள்ள பஸ் கட்டணம், பால் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. இதனை ஏற்பாடு செய்த வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுகளையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விலையேற்றம் செய்தது நியாயம்தானா?

தமிழக அரசு இந்த விலையேற்றம் செய்தது நியாயம்தானா? தமிழக மக்கள் தங்களை முன்னேற் றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நம்பி வாக்களித்தார்கள். அவர் களை ஏமாற்றும் நடவடிக் கையாக இந்த விலையேற் றம் அமைந்துள்ளது.

இந்த விலை உயர்வால் தமிழக அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படப் போகிறது. ஜெயலலிதா நல்லாட்சி ஏற்படுத்துவார் என்று நம்பி நாட்டில் சாதாரண ஏழை எளிய மக்கள்மிகப் பெரிய அளவில் வாக்கு களை அளித்தனர். அந்த மக்களுக்கு அளவிட முடியாத அளவுக்கு விலை உயர்வை ஜெய லலிதா உயர்த்தியுள்ளார்.

மாதம் ரூ.2 ஆயிரம் வரை அதிகச்சுமை

குறைந்தது ஒவ்வொரு வருக்கும் இந்த விலை உயர்வால் மாதத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் அதிகச் சுமை ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் இதை எப்படி தாங்கி கொள்வார் கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. உடன டியாக விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று சிற்றூர், பேரூர், நகரம் ஒவ்வொரு வீட்டிலும் கோரிக்கைகள் எழுந்துள் ளது.

பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு

தமிழகத்திற்கு வருவாய் இல்லை என்று ஜெய லலிதா கூறியிருக்கிறார். `இந்து� பத்திரிகையில் இன்று வந்துள்ள செய்தி – பத்திரப்பதிவு கட்ட ணத்தை 60 முதல் 70 சத வீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது� என்று அதே போன்று 4 மாதங்க ளுக்கு முன்பு 4 ஆயிரம் கோடிக்கு வரி போட்டுள் ளார். தி.மு.க.வை மைனா ரிட்டி அரசு என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறினார் ஜெயலலிதா. அந்த அரசு இவரைப் போன்று கட்டணங்களை உயர்த்தி ஏழை மக்களை வஞ்சிக்கவில்லை.

மத்திய அரசு தமிழக அரசுக்கு போதிய அளவு நிதி அளிக்கவில்லை என் றும், மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் நடந்து கொள்கிறது என்றும் ஜெயலலிதா கூறியிருக் கிறார்.

இதே ஜெயலலிதாதான் மத்திய அரசு நான் கேட்ட தொகையை விட அதிக மாக கொடுத்திருக்கிறது என்று மத்திய அரசையும், பிரதமரையும் பாராட் டினார்.

பிரதமரும் இந்தி யாவிலுள்ள மாநிலங்க ளிலேயே திறமையானவர், சிறந்த முதல்வர் என்று ஜெயலலிதாவை பாராட் டினார். அப்படி இருவரும் பாராட்டி விட்டு நிதி கொடுக்கவில்லை என்று ஜெயலலிதா இன்று குறை கூறுகிறார்.

ஜெயலலிதா பட்டியல் தரட்டும்

மத்திய அரசு எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தரவில்லை என்று ஜெய லலிதா பட்டியல் வெளி யிட வேண்டும். நாங்களும் மத்திய அரசில் அங்கம் வகிக்கிறோம். மத்திய அரசை வலியுறுத்தி தேவைப்பட்டால் இதே போன்று போராட்டம் நடத்தி பெற்றுத் தரவும் தயாராக இருக்கிறோம். ஜெயலலிதா பட்டியல் தர தயாராக வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் உரையாற்றினார்.

டிசம்பர் 3-ல்

தமிழகம் முழுவதும் இ.யூ. முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

பின்னர் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது குறிப் பிட்டதாவது-

தமிழக அரசு திடீ ரென்று பஸ் கட்டணம், பால் விலை களை அதிக அளவு உயர்த்தி யுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக அறிவித் துள்ளது. இதனால் தமிழ கத்தில் உள்ள அனைத்து மக்களும் கொந்தளித்துள் ளனர். எனவே, விலை உயர் வைக் குறைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட் டம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் இதேபோன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் அல்லது மின்வாரிய அலுவ லகங்கள் முன் வரும் டிசம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை இந்த ஆர்ப் பாட்டங்கள் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிவில் வட்ட ஆட்சியரிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை மனுக் களும் அளிக்கப்பட உள்ளன.

உயர்த்திய கட்ட ணத்தை ரத்து செய்ய முடியாது என்று ஜெய லலிதா கூறியிருக்கிறார். மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு ரத்து செய்வார் என்று நம்புகிறோம். ஏனென் றால் அவர் நேற்று சொல்லி யதை இன்று செய்ததில்லை. இன்று சொல்வதில் நாளை உறுதியாக இருப்பது இல்லை என்பது அனைவரும் அறிந் ததே. இவ்வாறு பேராசிரியர் குறிப்பிட்டார்.

Add Comment