பி.சி.சி.ஐ., மீது ராஜஸ்தான் ராயல்ஸ் வழக்கு!

ஐ.பி.எல்., அமைப்பிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) மீது, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்.

கடந்த 2008ல் இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஐ.பி.எல்., “டுவென்டி-20′ போட்டிகள் ஆண்டு தோறும் வெற்றிகரமாக நடந்தன. இதில், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் ஏலம் மூலம் கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டன.

ராஜஸ்தான் நீக்கம்: இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. இந்த அணியை “எமர்ஜிங் மீடியா’ நிறுவனம் ரூ.268 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் பெரும்பாலான பங்குகளை பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வாங்கினார். இந்த அணியின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்த முறையான தகவலை, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) Viagra No Prescription தெரிவிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதே பிரச்னையில், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சிக்கியது. இதனையடுத்து இவ்விரு அணிகளின் உரிமையை கடந்த 10 ம் தேதி பி.சி.சி.ஐ., ரத்து செய்தது. இதனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில் இந்த இரு அணிகளும் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கு: இந்நிலையில், ஐ.பி.எல்., அமைப்பிலிருந்து நீக்கிய பி.சி.சி.ஐ., மீது, மும்பை ஐகோர்ட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட மும்பை ஐகோர்ட், இதற்கு பதிலளிக்குமாறு பி.சி.சி.ஐ., க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு, நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வழக்கு தொடர்ந்தது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான மனோஜ் பதாலே கூறுகையில்,”” நாங்கள் என்ன தவறு செய்தோம் என, இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள், உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, வழக்கு தொடர்ந்துள்ளோம்,” என்றார்.

Add Comment