காமன்வெல்த் ஊழல்: சிக்கலில் டில்லி அரசு

காமன்வெல்த் போட்டி தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க, டில்லி மாநில அரசு மறுத்து வருகிறது. இதற்கு மத்திய கணக்கு தணிக்கை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

buy Lasix online style=”text-align: justify;”>டில்லியில் காமன்வெல்த் போட்டி (அக்.3-14 ) நடந்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாயில் பெருமளவு ஊழல் நடந்தது தெரியவந்துள்ளது. காமன்வெல்த் தொடர்பாக, டில்லி நகரில் மொத்தம் 76 கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு டில்லி அரசிடம், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் சில நாட்களுக்கு முன் கேட்டது. ஆனால் டில்லி மாநில அரசு, 25 கட்டமைப்பு பணிகளுக்கான ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தது. மீதமுள்ள 51 கட்டுமானப் பணிகள் குறித்த தகவலை அளிக்க வில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், முறையான தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தவிர, இதற்கான செலவினங்கள் குறித்த விவரங்களையும் கேட்டுள்ளது.

தனிப்பிரிவு: இதனிடையே, காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல் குறித்து விசாரிக்க, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் தனிப்பிரிவை அமைத்துள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”” காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகளில், அதிக அளவில் ஊழல் நடந்திருக்கிறது. இது குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனை விசாரிக்க, தனிப்பிரிவை ஆரம்பித்துள்ளோம். டில்லி மாநகராட்சி நிர்வாகம், டில்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் பொதுப்பணித்துறையிடம் விரைவில் விசாரணையை துவக்க உள்ளோம் ,” என்றார்.

லல்லி நழுவல்:காமன்வெல்த் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பிரிட்டனை சேர்ந்த “எஸ்.ஐ.எஸ்., லைவ்’ நிறுவனம் 246 கோடி ரூபாய்க்கு பெற்றது. இந்நிறுவனம் 29 கோடி ரூபாய், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்தது. தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் “எஸ்.ஐ.எஸ்., லைவ்’ நிறுவனத்துக்கு, பிரசார் பாரதி அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பி.எஸ்.லல்லி ஒப்பந்தம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து நேற்று பேட்டி அளித்த லல்லி கூறுகையில்,”” மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த பின் தான், “எஸ்.ஐ.எஸ்., லைவ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. தவிர, வரி ஏய்ப்பு விவகாரம் குறித்து நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இதனை வருமானத் துறை தான் கவனிக்க வேண்டும்,” என்றார்.

Add Comment